ETV Bharat / international

ஒற்றை இருமலால் காலியான சூப்பர் மார்கெட் - கரோனா பிராங்கால் ஏற்பட்ட விபரிதம்!

ஹாரிஸ்பர்க்: சூப்பர் மார்கெட்டில் ஒரு பெண் இருமியதால் கரோனா பயத்தில் மொத்த உணவு பொருள்களையும் நிர்வாகம் அப்புறப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

dsd
sdds
author img

By

Published : Mar 27, 2020, 8:16 PM IST

"விளையாட்டு வினையாகும்" என்ற நமது முன்னோர்களின் சொல் பல இடங்களில் உண்மையாகத் தான் செய்கிறது. ஆபத்தை உணராமல் வெறும் ஜாலிக்காக செய்யும் இளைஞர்களின் குறும்புத்தனம், பல நேரங்களில் அவர்களே எதிர்ப்பார்காத விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது கரோனா வைரஸால் பயத்தில் உலக நாடுகளே திணறி கொண்டிருக்கும் நேரத்தில், பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பொறுப்பற்ற செயல் அனைவருக்கும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், சூப்பர் மார்கெட்டில் பொருள்களை வாங்கச் சென்றுள்ளார். அப்போது, காய்கறிகள் விற்பனை செய்யும் இடத்தில் நின்றுக்கொண்டிருந்த பெண், கரோனா வைரஸ் பெருந்தொற்று இருமலில் பரவும் என்பதால், அவர் விளையாட்டாக இருமியுள்ளார். இதைப் பார்த்த சக வாடிக்கையாளர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். நிர்வாகத்தினர் அப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அவர் ஜஸ்ட் பிராங் எனக் கேலி செய்துள்ளார். இருப்பினும் மக்களின் பாதுகாப்பை கருதி வைக்கப்பட்டிருந்த 26 லட்சம் மதிப்புள்ள உணவு பொருள்களை அப்புறப்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு சூப்பர் மார்கெட்டின் உரிமையாளர் தள்ளப்பட்டார்.

prank
சூப்பர் மார்கெட் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி

இதுகுறித்து சூப்பர் மார்கெட் நிர்வாகம் பதிவிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், பெண்ணின் பிராங் காரணமாக சுமார் ரூ. 26 லட்சம் மதிப்பிலான பேக்கரி உணவுகள், இறைச்சிகள், மளிகை பொருள்கள், காய்கறிகள் அனைத்தையும் அப்புறப்படுத்தியுள்ளோம். சூப்பர் மார்கெட் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தனர். இப்பிரச்னை விஸ்வரூபம் எடுக்க, நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் அப்பெண்னை காவல் துறையினர் கைது செய்தனர்.

  • CHARGED - Margaret Cirko of Hanover Twp is facing several charges, including 4 felonies, after allegedly coughing and spitting on produce throughout Gerrity's causing the grocery store to throw out $35k+ of inventory. She was arraigned inside a police vehicle by DJ Halesey @WNEP pic.twitter.com/o7dwdrU4Am

    — Chelsea Strub (@chelseastrub) March 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதற்கு முன்பு, மிசோரி மாகாணத்தில் கரோனா வைரஸ் பயம் இல்லை என்பதை காண்பிக்க கடையில் உள்ள பொருள்களை நாக்கால் நக்குவது போல் வீடியோ வெளியிட்ட நபர் ஒருவரின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'கரோனாவுக்கு கோவிந்தா தான்!' - ஸ்ரீரங்கத்தில் சிறப்பு யாகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.