அமெரிக்காவின் அலாஸ்கா ஸ்டெர்லிங் நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள சோல்டோட்னா பகுதியில் டிஎச்சி-2 பீவர், பைபர்-பிஏ 12 எனும் இரண்டு சிறிய ரக விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் இரு விமானங்களில் இருந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
தகவலறிந்த தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இதுகுறித்த விசாரணையை தொடங்கியது. முதற்கட்ட தகவலில், “இரண்டு விமானங்களில் ஒன்றில் ஆறு பேரும், மற்றொன்றில் ஒருவரும் பயணம் செய்துள்ளது” தெரியவந்துள்ளது.
இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் அலாஸ்கா மாகாணத்தின் எம்பி கேரி கநாப்பும்(Gary Knopp) ஒருவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அலாஸ்கா சட்டப் பேரவை சபாநாயகர் பிரைஸ் எட்மொன் (Bryce Edgmon) எம்பி கேரி கநாபிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கஜகஸ்தான் விமான விபத்து: 15 பேர் உயிரிழப்பு!