சீனாவில் வேகமாக பரவிவரும் கொவிட்-19 (கொரோனா வைரஸ்) நோய்த்தொற்று காரணமாக இதுவரை 2,236க்கும் மேற்பட்டோர் உயிர்யிழந்துள்ளதாகவும் 75,465க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நிலைமையை சரி செய்ய சீனா அரசு போராடி வரும் சூழலில், மக்களுக்கு சேவை புரியும் வண்ணம் அந்நாட்டு அரசு ரோபோக்களை பயன்படுத்திவருகிறது.
சீனா அரசு ரோபோக்களை பயன்படுத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் ரோபோக்கள் கொரோனவால் பாதிக்கப்படாத மக்களுக்கு உணவு வழங்குவது, இடத்தை சுத்தம் செய்வது என சேவை செய்து வருகின்றனர்.
ரோபோக்கள் சீன மக்களுக்கு சேவை புரியும் வீடியோ இணையவாசிகளால் அதிகமாக பேசப்பட்டுவருகிறது. மேலும் பல பேர் இதற்கு ஆதரவு தெரிவித்தாலும், ஒரு மனிதனை இன்னொரு மனிதன் கவனித்து கொள்வது போல் ரோபோக்களால் பாதுகாக்க முடியாது என சிலர் தெரிவித்து வருகின்றனர்.
மக்களை பாதுகாக்க சீன அரசு கடுமையாக போராடிவருகிறது என சீன அரசுக்கு பாராட்டுகளை தனது சமூக வலைதள பக்கத்தில் சிலர் பகிர்ந்து வருகினற்னர்.
இதையும் படிங்க: ஜப்பான் சொகுசுக் கப்பல்: மேலும் ஒரு இந்தியருக்கு கொரோனா!