ETV Bharat / international

துப்பாக்கிச் சூடு: கனடா காவல்துறையில் பணியாற்றிய பஞ்சாப் இளைஞர் உயிரிழப்பு ! - newstoday

கனடா காவல்துறையில் பணியாற்றிய பஞ்சாப் இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

பஞ்சாப் இளைஞர் உயிரிழப்பு
Punjab youth death
author img

By

Published : May 4, 2021, 7:02 AM IST

கொலம்பியாவில் வால்மார்ட் கடைக்கு அருகே கனடா காவல்துறையில் பணியாற்றிய பஞ்சாப் இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இத்தகவலின்படி, உயிரிழந்தவரின் பெயர் பிக்ரம்தீப் சிங், இவர் பஞ்சாப் அமிர்தசரஸ் பியாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர். 4-5 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவின் டெல்டா காவல்துறையில் சேர்ந்துள்ளார்.

இதுகுறித்து டெல்டா காவல்துறை அலுவலர் கூறுகையில், ஸ்கவுட்சாடெல் சென்ட்ரல் மாலின் பார்க்கிங் பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். அதில் டெல்டா காவல்துறை அலுவலர் பிக்ரம்தீப் சிங் உயிரிழந்தார். இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், சிங்கின் தந்தை குல்வந்த் சிங் ரந்தாவா மேலும் தகவல்களை சேகரிக்க கனடாவில் உள்ள தனது உறவினர்களுடன் தொடர்பில் இருப்பதாக தெரிகிறது என்றார்.

இந்த சம்பவத்தின் சில காட்சிகளை கனடா ஊடகங்கள் பகிர்ந்துள்ள போதிலும், துப்பாக்கிச் சூட்டின் சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இதையும் படிங்க: போதையில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை: போலீஸ் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.