அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் எச்-1 பி விசா பெறுவதற்கு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 30-ம் தேதி வெளியிட்ட ஆய்வு முடிவில் எச்-1 பி விசா வழங்க எடுத்துக்கொள்ளப்படும் நேரம் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 169 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அதிக நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கிட்டத்தட்ட பல மாதங்கள் காத்திருக்க வேண்டி உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு குடியேறும் மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கும் முயற்சியில் உள்ள அமெரிக்க அதிபரின் திட்டங்களுக்கு தற்போது உள்ள குடியேறும் சட்டம் தடையாக உள்ளது, எனினும் அந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்ய முடியாத சூழ்நிலை இருப்பதால் விசா வழங்கும் நேரத்தை திட்டமிட்டு தாமதிப்பதன் மூலம் அமெரிக்காவிற்கு குடியேறும் மக்களின் தொகையை குறைக்கலாம் என அமெரிக்க அரசு கருதுவதாக கூறப்படுகிறது.