ETV Bharat / international

அமெரிக்காவில் விமான விபத்து- 6 பேர் உயிரிழப்பு! - விபத்து

அமெரிக்காவின் தஹோ ஏரி (Tahoe Lake) பகுதியில் இரட்டை என்ஜின் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தபட்சம் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

plane crash near Lake Tahoe
plane crash near Lake Tahoe
author img

By

Published : Jul 29, 2021, 9:41 AM IST

டிரக்கி (அமெரிக்கா): தஹோ ஏரி பகுதியில் கோல்ஃப் மைதானத்திற்கு அருகே இரட்டை என்ஜின் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என காவல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க நாட்டின் வட கலிபோர்னியா எல்லைக்கு அருகே, இரட்டை என்ஜின் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அலுவலர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது ஆறு பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என காவல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவர்கள் தொடர்பான டிஎன்ஏ அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.

விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியுள்ளது. ஓடுபாதையிலிருந்து விலகி சென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இது குறித்து விசாரணை நடந்துவருகிறது.

இதையும் படிங்க : பிலிப்பைன்ஸ் ராணுவ விமான விபத்தில் 31 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.