ETV Bharat / international

"கரோனா தடுப்பு மருந்து 95 விழுக்காடு பலனளிக்கிறது" - ஃபைஸர் நிறுவனம் - பயோஎன்டெக்

நியூயார்க்: ஃபைஸர் நிறுவனம் தாங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து 95 விழுக்காடு பலனளிப்பதாகவும், அவசர பயன்பாட்டிற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

Pfizer COVID vaccine
Pfizer COVID vaccine
author img

By

Published : Nov 18, 2020, 7:33 PM IST

Updated : Nov 18, 2020, 7:59 PM IST

2020ஆம் ஆண்டையே புரட்டிப்போட்ட கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. உலகெங்கும் 10 நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்துகள், தற்போது மூன்றாம்கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது.

அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனம், ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech) என்ற நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தின் இரண்டாம் இடைக்கால முடிவுகளை அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதில், "இந்த ஆய்வு எங்கள் தடுப்பு மருந்து 95 விழுக்காடு பலனளிப்பதை தெளிவாக நிரூபிக்கிறது. எங்கள் மூன்றாம்கட்ட பரிசோதனையில் தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டவர்களில் 170 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

அவர்களில் 162 பேர் டம்மி மருந்தை எடுத்துக்கொண்டவர்கள். தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவர்களில் எட்டு பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவருக்கு மட்டுமே தொற்று மோசமாகியுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்கள் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து வயதானவர்களிடமும் சிறப்பாக வேலை செய்வதாக ஃபைஸர் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த வாரம் முதல் இடைக்கால முடிவுகளில் தங்களின் கரோனா தடுப்பு மருந்து 90 விழுக்காடு பலனளிப்பதாக ஃபைஸர் அறிவித்திருந்தது.

இதையும் படிங்க: 95 விழுக்காடு பலனளிக்கும் மாடர்னா கரோனா தடுப்பு மருந்து!

Last Updated : Nov 18, 2020, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.