வாஷிங்கடன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை, அதாவது அந்நாட்டின் கீழவையின் சபாநாயகராக ஜனநாயகக் கட்சி மூத்த தலைவர் நான்சி பெலோசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 80.
பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 216 பேர் நான்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவருக்கு எதிராக நின்ற குடியரசுக் கட்சி மூத்த தலைவர் கெவின் மெக்கார்திக்கு 209 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து நான்சி சபாநாயகராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பிரதிநிதி சபையின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான நான்சி பெலோசி, 2007-2011 காலகட்டத்தில் சபாநாயகராகப் பதவி வகித்தார். அதன் பின்பு 2018ஆம் ஆண்டு மீண்டும் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தற்போது மீண்டும் சபாநாயகராகியுள்ளார்.
இது தன்னுடைய கடைசி பதவிக்காலமாக இருக்கும் என நான்சி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்க செனட் சபையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு