ETV Bharat / international

'ஆபத்தை நோக்கி பயணிக்கும் உலகம்' - எச்சரிக்கும் சுற்றுச்சூழல் நிபுணர்கள்

ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுக்கும் சுற்றுச்சூழல் மாற்றங்கள், பெரிய சவாலை உலக நாடுகள் எதிர்கொள்வது தொடர்பாக விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

On wrong path
On wrong path
author img

By

Published : Dec 29, 2019, 3:27 PM IST

2015ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற 'உறுப்பினர்கள் மாநாடு (சிஓபி) 25' இந்த நூற்றாண்டு இறுதிக்குள் புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸில் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. பாரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கும் அனைத்து உலக நாடுகளுக்கும் இது இலக்காக இருந்தது.

இந்த மாநாடு ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் டிசம்பர் 2 முதல் 13ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற்றது. அதில் முக்கிய அம்சங்கள் குறித்து எந்த முன்னேற்றமும் இல்லாததால் பாரிஸ் ஒப்பந்தத்தின் நோக்கம் நிறைவேறவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக பசுமை குடில் வாயு வெளியேற்றம் சராசரியாக 1.5 விழுக்காடு இருந்தது. சமீபத்தில் 55.3 ஜிகா டன் கார்பன் மோனாக்சைடு வெளியிடப்பட்டதால் புவி வெப்பமடைதல் அதிகரித்தது. இது எதிர்காலத்தில் ஆபத்தை விளைவிக்கும் என ஐநா சபை எச்சரித்தது.

'உறுப்பினர்கள் மாநாடு 25' தொடங்குவதற்கு முன் 195 உறுப்பு நாடுகளால் புவி வெப்பமடைதலை சரிபார்க்க செயல் திட்டம் ஒன்றை அமைக்க ஐநா சபை வலியுறுத்தியது. மாநாட்டின் தொடக்கத்தில், ஐ.நா. பொதுச்செயலாளர் சுற்றுச்சூழல் நாடுகளின் இலக்குகளை அடைவதற்கான செயல் திட்டத்தைச் செயல்படுத்த அடுத்த ஆண்டுக்குள் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு தேசிய உறுதியும் ஒத்துழைப்பும் (என்.டி.சி) இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய ஐ.நா பொதுச்செயலாளர், உறுப்பு நாடுகளிடம் தேசிய உறுதிப்பாடு, ஒத்துழைப்பு (என்.டி.சி) கொண்ட நாடுகள் அடைய வேண்டிய சுற்றுச்சூழல் திட்டங்களின் இலக்குகள் குறித்த செயல் திட்டத்தை அடுத்த ஆண்டுக்குள் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். 2050ஆம் ஆண்டில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும், புவி வெப்பமடைதலை சரிசெய்யும் முயற்சிகளின் தேவை குறித்தும் விவரித்தார்.

புவி வெப்பநிலையில் 1.1 விழுக்காடு உயர்ந்து இயற்கை பேரழிவுகளுக்கு வழிவகுக்கிறது. இதனால் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. 2020 முதல் 2030 வரை ஆண்டுதோறும் கார்பன் வெளியேற்றத்தை 7.6 விழுக்காடு குறைப்பதே உலக நாடுகளின் இலக்காகும். இதற்கு நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் உலகளாவிய வெப்பநிலை 2100 க்குள் 3.2 டிகிரி செல்சியஸ் அளவு உயரக்கூடும் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, ஜப்பான், கொரியா, சீனா, இந்தியா, மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், அர்ஜென்டினா மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து 78 விழுக்காடு பசுமை குடில் வாயு வெளியேற்றம் நடந்துள்ளது.

அதிகமான கார்பன் வெளியேற்றத்துக்கு பங்களிக்கும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள (15 விழுக்காடு) அமெரிக்கா, பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது, பாரிஸ் ஒப்பந்தத்தின் 6ஆவது பிரிவில் புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உறுப்பு நாடுகள் மோதலில் ஈடுபட்டுள்ளன. கார்பன் வெளியேற்ற வர்த்தகத்திற்கான பிரிவு 6.2 மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பிரிவு 6.4 குறித்து நாடுகளிடையே சமநிலை இல்லாததால் தொழில்நுட்ப ரீதியாக ஒருமித்த முடிவு சாத்தியமில்லை.

இது வளரும் நாடுகளின் செயல் திட்டத்தின் மூலம் சரியான பாதையில் செல்ல பாரிஸ் ஒப்பந்தத்துக்கு தடையாக உள்ளது. கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப அறிவைப் பெறுவதற்கு நீண்டகால நிதி உதவியை வழங்க நாடுகளிடையே ஒரே மாதிரியான முடிவு எட்டப்படாமல் இருப்பது பாரிஸ் உடன்படிக்கைக்கு பெரும் தடையாக இருக்கிறது.

புவி வெப்பமடைதல் மற்றும் கார்பன் வெளியேற்றம் குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை ஐநாவில் தெளிவுபடுத்தியது. அதில், 2020க்கு முன்னர் மற்ற நாடுகள் வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் புதிய இலக்குகளை நிர்ணயிப்பதில் பயனில்லை. கியோட்டோ நெறிமுறை செயல் திட்டத்தை செயல்படுத்துவதற்கு பதிலாக பாரிஸ் ஒப்பந்தத்தைப் பற்றி பேசுவது அர்த்தமற்றது என்று இந்தியா தெரிவித்தது. அதே நேரத்தில் வளரும் நாடுகளுக்கு கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான இலக்குகளை அடைய 2023 வரை நேரம் நீட்டிக்க இந்தியா வலியுறுத்தியது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இந்தியா தன்னார்வ முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியாக கார்பன் வெளியேற்றத்தில் 21 விழுக்காடாக குறைத்துள்ளது. பாரிஸ் ஒப்பந்தத்தின்படி கார்பன் வெளியேற்றத்தை 35 விழுக்காடு குறைக்கும் இலக்கை எட்டுவதற்கான செயல் திட்டத்துடன் இந்தியா உள்ளது.

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் கார்பன் வெளியேற்றத்தை சரி செய்ய தொடர்ந்து புறக்கணித்தால், 3.4 விழுக்காடு என்பது 3.9 விழுக்காடாக உயரக்கூடும், சராசரி உலக வெப்பநிலையின் அபாயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Intro:Body:

On wrong path, despite big danger ahead Negligence on Paris Target in COP 25 meet

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.