சான் பிரான்சிஸ்கோ உயிரியல் பூங்காவில் வசித்துவந்த வயதான ஆண் சிம்பன்சி, நேற்று (ஜூன் 6) உயிரிழந்தது. அதற்கு வயது 63.
1960களில் சான் பிரான்சிஸ்கோ உயிரியல் பூங்காவுக்குக் கொண்டுவரப்பட்ட இந்தச் சிம்பன்சிக்கு, கோபி என்று பெயரிடப்பட்டது. குரங்கின் உயிரிழப்புக்கு உறுதியான காரணம் தெரியவில்லை என்றாலும், வயது மூப்பின் காரணமாக உயிரிழந்திருக்கக்கூடும் எனப் பூங்கா நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
வனப்பகுதியில் வாழும் 1,00,000 முதல் 2,00,000 சிம்பன்சிகளின் சராசரி ஆயுள்காலம் 33 ஆண்டுகள் ஆகும். ஆனால், அதேசமயம், மனித பராமரிப்பில் வாழும் சிம்பன்சிகள் 50 முதல் 60 வயது வரை வாழக்கூடியது. கோபி சிம்பன்சி, கூட்டத்தை வழிநடத்துவதில் சிறந்து விளங்கியதாகவும், அதன் மறைவுக்குப் பூங்கா காப்பாளர்கள் இரங்கல் தெரிவிக்கின்றனர்.