ETV Bharat / international

நண்பருக்கு ஆதரவாக களமிறங்கும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா - US election

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவாக நிதி திரட்டும் நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பங்கேற்கவுள்ளார்.

Obama to join Biden
Obama to join Biden
author img

By

Published : Jun 17, 2020, 6:58 PM IST

அமெரிக்க அதிபராக இருக்கும் ட்ரம்பின் பதவி காலம் இந்தாண்டு நவம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிறது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் களமிறங்குகின்றனர்.

கோவிட்-19 பரவல் காரணமாக இந்தத் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் ஜோ பிடன் இதுபற்றி எந்த கவலையுமின்றி காணொலி வாயிலாக பரப்புரை, நிதி திரட்டும் நிகழ்ச்சி என்று தொடர்ந்து பங்கேற்றுவருகிறார்.

இந்நிலையில், தனக்கு ஆதரவாக நிதி திரட்டும் நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பங்கேற்கவுள்ளதாக ஜோ பிடன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜோ பிடன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு முக்கிய செய்தி, அடுத்த வாரம் என்னுடைய நண்பரும் முன்னாள் அதிபருமான பராக் ஒபாமாவுடன் இணைந்து காணொலி காட்சி வழியே நடைபெறும் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளேன். அங்கு உங்களை காண ஆர்வமாக உள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிலிருந்த பெர்னி சாண்டர்ஸ், எலிசபத் பிரவுன் ஆகியோர் போட்டியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து ஜோ பிடன் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, அதிபர் தேர்தல் பரப்புரைக்காக இதுவரை 80.8 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளதாக ஜோ பிடன் அறிவித்திருந்தார். மேலும், "சராசரியாக ஒவ்வொரு இணையவழி நன்கொடையின் மூலமும் எங்களுக்கு 30 டாலர்கள் கிடைத்துள்ளது" என்றும் ஜோ பிடன் தனது ஆதரவாளர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.

  • Folks, I’ve got some big news: Next week, I’m getting together with my friend and former boss, President @BarackObama, for a virtual grassroots fundraiser. We would love to see you there.

    Chip in now to get your ticket: https://t.co/UD3RHHKIw1

    — Joe Biden (@JoeBiden) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நிதி திரட்டும் நிகழ்ச்சி குறித்து முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா அனுப்பியுள்ள மின்னஞ்சலில், "நம் வாழ்நாளில் மிக முக்கிய தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தல் மூலம் நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். அனைவருக்கும் சுகாதார காப்பீடு கிடைப்பது உறுதி செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் ஒபாமா அமல்படுத்திய 'ஒபமா கேர்' என்ற காப்பீட்டுத் திட்டம் சரியில்லை என்று கூறி ட்ரம்ப் அரசு அதை ரத்து செய்தது. இதனால் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இதுவரை அமெரிக்காவில் 22,08,787 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 1,19,145 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்குமா, நடக்காதா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.