ETV Bharat / international

கரோனா சுனாமியிலிருந்து காப்பாற்றுங்கள்; கெஞ்சும் நியூயார்க் கவர்னர் - Covid 19 news USA

கரோனா வைரஸ் அமெரிக்காவை கடுமையாக பாதித்துள்ள நிலையில், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரின் கவர்னர் ஆன்ட்ரூ க்யூமோ தன்னார்வளர்களிடம் உதவியை நாடியுள்ளார்.

New York governor
New York governor
author img

By

Published : Mar 31, 2020, 10:37 AM IST

உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள அமெரிக்கா, இந்நோய் தொற்றின் மையப்புள்ளியாக தற்போது மாறியுள்ளது. அந்நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 64 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 ஆயிரத்து 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க் தற்போது கரோனா பாதிப்பை சமாளிக்க முடியாமல் திணறிவருகிறது. நியூயார்க் மாகாணத்தில் மட்டும் 67 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு வென்ட்டிலேட்டர்கள், படுக்கைகள், முகக்கவசங்கள் கிடைக்காமல் தவித்துவருவதாக தெரிவித்த நியூயார்க் கவர்னர் ஆன்ட்ரூ க்யூமோ, ஏப்ரல் மாதத்தில் நிலைமை மேலும் மோசமடையும் என அச்சம் தெரிவித்துள்ளார்.

மேலும், கரோனா பாதிப்பு நியூயார்க் நகரில் சுனாமி போல் தீவிரமடைந்துவருவதாகவும், இதை கட்டுப்படுத்த அரசு, சுகாதாரத்துறை நிபுணர்கள் ஆகியோருடன் தன்னார்வலர்களும் ஒன்றிணைய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அமெரிக்காவின் மற்ற மாகாணங்கள் கரோனா விவகாரத்தில் அலட்சியம் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கைவிடுத்துள்ள க்யூமோ, கவனக்குறைவாக இந்த விஷயத்தை கையாண்டால் பெரும் பின்விளைவைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனா: உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் முக்கிய கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.