ETV Bharat / international

முக்கிய ஆய்வுக்காக செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய நாசா

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்துள்ளனவா என்ற ஆராய்சிக்காக விண்கலம் ஒன்றை நாசா அனுப்பியுள்ளது.

NASA
NASA
author img

By

Published : Jul 31, 2020, 4:54 PM IST

உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனமான அமெரிக்காவைச் சேர்ந்த நாசா செவ்வாய் கிரகத்திற்கு புதிய விண்கலம் ஒன்றை அனுப்பியுள்ளது. பூமியிலிருந்து 48 கோடி கி.மீ தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்துள்ளனவா என்ற ஆய்வை மேற்கொள்ளவே இந்த புதிய விண்கலம் ஏவப்பட்டுள்ளது.

மிகப்பெரிய ரோவருடன் தயார் செய்யப்பட்ட இந்த விண்கலத்தில் புகைப்படக் கருவி, மைக்ரோபோன், லேசர் கருவிகள் ஆகியவைப் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விண்கலம் மூலம் செவ்வாய் கிரகத்திலிருந்து பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டுவர நாசா திட்டமிட்டுள்ளது.

ஏழு மாதப் பயணத்திற்குப்பின் இந்த விண்கலம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் செவ்வாய் கிரகத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விண்கலத்தின் திட்டமதிப்பு இந்திய ரூபாயில் சுமார் ஆறு லட்சம் கோடி ஆகும்.

செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய நாசா

2031ஆம் ஆண்டுக்குள் ஆய்வுகளை நிறைவு செய்து, பாறை மாதிரிகளை இந்த விண்கலம் கொண்டுவந்து சேர்த்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அதிபர் தேர்தல் குறித்து ட்ரம்பின் கருத்தால் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.