ETV Bharat / international

அவர்களைப் போலவே தனிமைப்படுத்தப்பட்ட உலகம்...! - அப்பல்லோ

தாங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதைப் போலவே உலகமும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகச்  சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்றுள்ள விண்வெளி வீரர் கூறியுள்ளார்.

NASA
NASA
author img

By

Published : Apr 15, 2020, 10:09 AM IST

கஜகஸ்தான் நாட்டிலிருந்து கடந்த சில நாள்களுக்கு முன் செலுத்தப்பட்ட சோயுஸ் காப்ஸ்யூல் விண்கலம் மூலம் அமெரிக்காவின் கிறிஸ் காசிடி, ரஷ்யாவின் அனடோலி இவானிஷின், இவான் வாக்னர் ஆகியோர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்தனர்.

அங்கு ஏற்கனவே இருந்த அமெரிக்காவின் ஜெசிகா மீர், ஆண்ட்ரூ மோர்கன், ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஆகியோருடன் இணைந்தனர். அதைத்தொடர்ந்து அமெரிக்க விண்வெளி வீரர்கள் மூவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்தவாறே செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய கிறிஸ் காசிடி, "விண்வெளியில் எங்கள் குழு தனிமைப்படுத்தப்படும் என்பது ஒரு ஆண்டுக்கு முன்பே எங்களுக்குத் தெரியும். ஆனால் உலக மக்கள் அனைவரும் எங்களுடன் சேர்ந்து தனிமைப்படுத்திக்கொள்வார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது" என்றார்.

கடந்த ஆறு மாதங்களாக விண்வெளி ஆய்வு மையத்திலிருந்த ஜெசிகா மீர், ஆண்ட்ரூ மோர்கன், ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு விண்வெளி வீரர் ஆகியோர் அடுத்த வாரம் பூமிக்குத் திரும்ப உள்ளனர்.

இது குறித்துப் பேசிய ஜெசிகா மீர், "பூமிக்குத் திரும்பியதும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் கட்டித்தழுவிக் கொள்ள முடியாது என்பது எனக்குக் கடினமாகவே இருக்கும்" எனக் குறிப்பிட்டார்.

கரோனாவால் பூமிக்குத் திரும்பும் திட்டத்தில் ஏதாவது சிக்கல் ஏற்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஆண்ட்ரூ மோர்கன், "50 ஆண்டுகளுக்கு முன் அப்போலோ விண்கலத்திலிருந்த வீரர்களை எப்படிப் பத்திரமாகத் தரையிறக்கினார்களோ அதைப் போல எங்களையும் பத்திரமாகத் தரையிறக்குவார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

தற்போது விண்வெளிக்குச் சென்றுள்ள வீரர்கள் அக்டோபர் மாதம்வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.

இதையும் படிங்க: கோவிட்-19: உலக சுகாதார அமைப்பின் கவலைகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.