ETV Bharat / international

லைசால்... பிளீச்சிங் பவுடர்...ட்ரம்ப் பேச்சைக் கேட்டு விபரீத முடிவெடுத்த நியூயார்க் வாசிகள் - அமெரிக்க அரசு கிருமி நாசினி

கரோனாவைத் தடுக்க கிருமி நாசினியை உடம்புக்குள் செலுத்தலாம் என அதிபர் ட்ரம்பின் விபரீத யோசனையை நியூயார்க் நகர வாசிகள் பின்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

trump
trump
author img

By

Published : Apr 26, 2020, 5:09 PM IST

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தீவிரத்தை எதிர்கொள்ள பெரும் போராட்டமே நடந்துவரும் நிலையில் அந்நாட்டு அதிபர் டொனல்ட்டு ட்ரம்ப் அண்மையில் கூறிய கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருமி நாசினிகள் கரோனா வைரஸை அழிக்கும் வல்லமை கொண்டுள்ளதால், அவற்றை நோய் பாதித்தவர்களின் உடலில் செலுத்தினால் என்ன என்ற ஆகச் சிறந்த சிந்தனையை ட்ரம்ப் சிதறவிட்டார்.

ட்ரம்பின் இந்த கருத்தை கேட்டு மிரண்டுபோன அமெரிக்க ஊடகங்கள் இதை உலகளவில் ட்ரென்டாக்கவே, நான் சும்மாச்சுக்கும் கிண்டலுக்கு சொன்னேன் அதப்போய் சீரியசா எடுத்துக்கிட்டீங்களா அப்படினு ஜகா வாங்கினார்.

ஆனால் ட்ரம்பின் காமெடியை புரிந்துகொள்ளாத நியூயார்க் நகரவாசிகள் 30 பேர் ட்ரம்பின் யோசனையை நேரடியாக பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். ட்ரம்ப் கருத்துகூறிய 18 மணிநேரத்தில், சுமார் 30 பேர் கிருமிநாசினிகளை உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தி கரோனாவை அழிக்கும் முயற்சியில் களமிறங்கியது வேதனைக்குரிய விவிகாரமாக மாறியுள்ளது.

இந்த முப்பது பேரில் 9 பேர் லைசாலையும், 10 பேர் பிளீச்சிங் பவுடரையும், 11 பேர் வீடு சுத்தம் செய்யும் திரவியங்களையும் செலுத்திக்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் விஷ தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. கரோனா பாதிப்பின் தாக்கம் உலக வல்லரசான அமெரிக்காவை எந்தளவிற்கு திக்குமுக்காடச் செய்துள்ளது என்பதை மேற்கொண்ட விவகாரமே படம்பிடித்து காட்டுகிறது.

அந்நாட்டில் கரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கும் நிலையில், சுமார் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: இனிமை நிறைந்த உலகம் இருக்கு கொரோனா பற்றிய கவலை எதற்கு...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.