உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக போராடிவருகின்றன. இந்நிலையில், பொது சுகாதாரத்தினை பத்து மடங்கு அதிகரிக்கும் நிலைக்கு ஒவ்வொரு நாடுகளும் தள்ளப்பட்டுள்ளன.
இதற்கு முன் ஏற்பட்டுள்ள பெருந்தொற்றுகளை நாம் உற்று நோக்கினால் நாம், தடுப்பூசி மற்றும் சிறப்பு சிகிச்சைகளின் மூலமே இறப்புகளை கட்டுக்குள் கொண்டுவந்திருப்போம். ஆனால், தற்போது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் சுகாதார கட்டமைப்பை பின்னுக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறது.
2014-15 காலகட்டத்தில் அம்மை, மலேரியா, எச்.ஐ.வி., எய்ட்ஸ் போன்ற பெருந்தொற்றுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளைவிட எபோலா எனப்படும் நோயினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகம் என்றும் இந்த உயிர்க்கொல்லி நோயிலிருந்து வலுவான மருத்துவக் கட்டமைப்புகளால் மீண்டோம் எனவும் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் அதாநோம் கெப்ரேயஸ் தெரிவித்திருந்தார்.
இன்று, கோவிட்-19 இன் பாதிப்புகள் உலகின் சுகாகார அமைப்புகள் எவ்வளவு பலவீனம் அடைந்துள்ளது என்பதை வெளிப்படையாக உணர்த்துவதாக உள்ளது. அதுமட்டுமின்றி, உலக நாடுகள் அனைத்தும் தம் மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய எடுத்துவரும் முயற்சிகளையும் வெளிகாட்டிவருகிறது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு இந்த பெருந்தொற்று காலகட்டத்தில் உதவும் வகையிலும், சமூக கட்டமைப்பை காக்கும் வகையிலும் சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில், மக்களுக்கு இந்த காலகட்டத்தில் தேவையான அத்தியாவசிய உதவிகளைக் கண்டறியுமாறு வலியுறுத்தியுள்ளது. உதாரணமாக, பேருகால உதவிகள், குழந்தை, முதயவர்கள் பராமரிப்பு, தேவையற்ற வதந்திகளிலிருந்து மனநிலைகளை சீராக வைக்க உதவுதல் போன்றவை மக்களுக்கு இன்றியமையாதது.
நாடுகள் இந்த சமயத்தில் மற்ற நாடுகளுக்கு உதவவேண்டும் என்றும், போதுமான மருத்துவ உபகரணங்களை இருப்பு வைத்திருத்தல், தொழிலாளர் நலன்களை பேணுதல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவதும் முக்கியமான ஒன்று எனவும் தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள சுகாதார அமைப்புகள் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டு, அத்தியாவசிய பொருட்களை கையாளுவது குறித்த தெளிவான முன்னேற்பாடுகளை உறுதி செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பேரிடர் அல்லாத காலங்களிலும் மக்களின் தேவைகளை சீரான முறையில் கையாளலாம் எனக் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, நோய்த் தொற்றுகளின்றி, பொருளாதார சிக்கல்களையும் நிலைப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, மக்களும் தங்களாலான நம்பிக்கைகளை அரசிற்கு உரித்தாக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'உலகப் போர்களின்போது சந்தித்ததைவிட மோசமான நெருக்கடியை உலகம் சந்திக்கும்'