வெனிசுலாவில் இரண்டு நாள்களுக்கு முன்பு அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஆனால், தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என குற்றஞ்சாட்டி எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் குயாடே பங்கேற்க மறுப்பு தெரிவித்துவிட்டார். இதையடுத்து நிக்கோலஸ் மடுரோவுக்கு வெற்றி சென்றடைந்தது.
இந்நிலையில் இன்று, வெனிசுலா பிரதமர் நிக்கோலஸ் மடுரோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தேர்தல் நாளன்று தன்னை கொலை செய்ய கொலம்பியா அதிபர் திட்டமிட்டதாக தெரிவித்தார். அவரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இதுதொடர்பாக எவ்வித ஆதாரங்களையும் நிக்கோலஸ் சமர்ப்பிக்கவில்லை என கூறப்படுகிறது.
2019இல் மடுரோவை மீறி தன்னை இடைக்கால அதிபராக அறிவித்த குயாடே, இந்தத் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை எனவும், இது ஒரு மோசடி செயல்முறையின் உச்சம் எனவும் தெரிவித்தார். வரும் ஜனவரி 5இல், அதிபர் நிக்கோலஸ் மடுரோ நிர்வாகம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆட்சியில் அமரவுள்ளது குறிப்பிடத்தக்கது.