ETV Bharat / international

கரீபியத் தீவுகளுக்கு  ஒரு வாரத்தில் 1.75 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பிய இந்தியா

author img

By

Published : Mar 9, 2021, 3:19 PM IST

கரீபியன் தீவுகளைச் சேர்ந்த நாடான ஜமைக்கா நாட்டிற்கு அஸ்ட்ரா செனேக்கா தடுப்பூசியை இந்தியா அனுப்பிவைத்துள்ளது.

COVID-19 vaccines
COVID-19 vaccines

உலகப் பெருந்தொற்றான கோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து போராடிவரும் நிலையில், இந்தியா தனது பங்களிப்பாக பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகம் மேற்கொண்டுவருகிறது. இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் அஸ்ட்ரா செனேக்கா தடுப்பூசியும், பாரத் பயோட்டெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில், கரீபியன் தீவுகளைச் சேர்ந்த நாடான ஜமைக்கா நாட்டிற்கு அஸ்ட்ரா செனேக்கா தடுப்பூசியை இந்தியா அனுப்பிவைத்துள்ளது. கரீபிய நாட்டு நண்பர்களுக்காக இந்தியாவில் தயாரானா தடுப்பூசிகள் ஜமைக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியா ஒரு லட்சத்து 75 ஆயிரம் தடுப்பூசி டோஸ்களை கரீபிய தீவுகள் நாடான ஆன்டிகுவா மற்றும் பார்புடா, செயின்ட் லூசியா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய நாடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளது. இதுவரை 25 நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், இனி வரும் நாள்களில் மேலும் 49 நாடுகளுக்கு தடுப்பூசி அனுப்பப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராகுலை மீண்டும் தலைவராக்க இளைஞர் காங்கிரஸ் தீர்மானம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.