நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாகப் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மத்தியில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.
இவரின் வெற்றிக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், கரீபியன் நாடான ஜமைக்காவின் பிரதமர் ஆண்ட்ரூ மைக்கேல் ஹோல்ன்ஸ் தற்போது தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த அழைப்பின் போது, ஜமைக்கா உள்ளிட்ட கரீபியன் நாடுகளுடன் இந்தியா நல்லுறவு கொள்வதில் முன்னுரிமை கொடுத்து வருவது குறித்து பிரதமர் மோடி பேசியதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், கரீபியன் நாடுகளுடனான பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும் நிதியகத்தில் சர்வதேச உறுப்பினராக இந்தியா இணைந்தது குறித்து மோடி குறிப்பிட்டுப் பேசியுள்ளார். அதனை ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூவும் வரவேற்றுள்ளார்.