ETV Bharat / international

அமெரிக்க அதிபர் மகளுக்கு கரோனா? - coronavirus in America

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்பின் தனிப்பட்ட உதவியாளருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Ivanka Trump's personal assistant tests COVID-19 positive

author img

By

Published : May 9, 2020, 12:56 PM IST

கரோனா வைரஸ் பெருந்தொற்றால் மற்ற நாடுகளைவிட அமெரிக்காதான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை 1,283,929 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 77,180 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பணிபுரியும் அலுவலர்களும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்பின் தனிப்பட்ட செயலாளருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. கடந்த சில வாரங்களாக அந்த செயலாளர் இவாங்கா ட்ரம்புடன் வெள்ளை மாளிகையில் பணிபுரியாமல் தனது வீட்டில் பணிபுரிந்துவந்தார்.

இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவாங்கா ட்ரம்ப், அவரது கணவர் ஜாரேட் குஷ்னருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் இருவருக்கும் கரோனா இல்லை என்பது தெரியவந்தது. இதனிடையே, நேற்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸின் செய்தியாளர் கேட்டி மில்லருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனால், வெள்ளை மாளிகையில் பணிபுரியும் மற்ற அலுவலர்களுக்கும் இத்தொற்று பரவமால் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை உடனடியாக செய்யப்பட்டுவருகிறது. அந்தவகையில், அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் இருவருக்கும் கரோனா தொற்று இல்லை என ஆய்வின் முடிவில் தெரியவந்தது.

முன்னதாக, ட்ரம்பின் தனி பாதுகாவலருக்கு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதையடுத்து, வெள்ளை மாளிகையில் பணிபுரியும் அனைவருக்கும் தினந்தோறும் கரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இரண்டாம் உலகப் போரின் 75ஆவது ஆண்டு நிறைவு நாள் - உலகம் முழுவதும் கொண்டாட்டம் ஒத்தி வைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.