பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு ஏழுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே, நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற ப்ளூம்ஸ்பர்க் உலக வணிக மாநாட்டில் (Bloomsberg Global Business Forum) கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "முதலீடு செய்யவேண்டும் என்றால் இந்தியாவுக்கு வாருங்கள். அங்கு வாய்ப்பு அமோகமாக உள்ளது.
![Bloomsberg Global Business Forum](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4556710_bloomsberg.jpg)
இதையும் படிங்க: 'இந்தியாவுக்கென தனியொரு வழி வேண்டும்' - வெளியுறவுத் துறை அமைச்சர்
பெரு நிறுவனங்களுக்கான (கார்ப்பரேட்) வரி விகிதத்தை 35 சதவீதத்திலிருந்து 25.17 சதவீதமாகக் குறைத்துள்ளோம். இதன்மூலம் உலகின் முக்கியப் பொருளாதார சந்தைகளுக்கு இணையாக இந்தியா உருவெடுத்துள்ளது.
என் தலைமையிலான இந்த புதிய அரசு அமைந்து வெறும் சில மாதங்களே நிறைவடைந்துள்ளன. இது வெறும் தொடக்கம் தான். உலக வணிக சமூகத்துடன் ஒருசேர்ந்து பயணிக்க விரும்புகிறோம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவுக்கு வெளிநாடுகளிலில் இருந்து நேரடியாக சுமார் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
2024-25ஆம் ஆண்டுக்குள் இந்தியா பொருளாதார மதிப்பை ஐந்து லட்சம் கோடி உயர்த்த முற்படுகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: கேரிகாம் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு