ETV Bharat / international

'சீனாவின் ஆக்கிரமிப்புக்கு ட்ரம்பின் மோசமான வெளியுறவுக் கொள்கையை காரணம்'- ஹிலாரி கிளிண்டன் குற்றச்சாட்டு!

author img

By

Published : Jul 22, 2020, 9:30 PM IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மோசமான வெளியுறவுக் கொள்கையால் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பயன்பெறுகின்றன என்று ஹிலாரி கிளிண்டன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Chinese aggression Hillary Clinton Hillary Clinton blames Trump Trump administration Russia China சீனா ஆக்கிரமிப்பு ட்ரம்ப் வெளியுறவுக் கொள்கை ஹிலாரி கிளிண்டன்

வாஷிங்டன்: இந்தியா உள்பட அண்டை நாடுகளுக்கு எதிரான தற்போதைய சீன பிராந்தியத்தின் ஆக்கிரமிப்புக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் "சீரற்ற" வெளியுறவுக் கொள்கையை காரணம் என முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன் செவ்வாய்க்கிழமை (ஜூலை21) குற்றம் சாட்டினார்.

மேலும், “ட்ரம்பின் பலவீனமான வெளியுறவுக் கொள்கையால் ரஷ்யாவும் சீனாவும் பயனடைவதாகக் கூறினார். இருப்பினும், அதிபர் ட்ரம்பை விட கடந்த காலங்களில் எந்தவொரு நிர்வாகமும் சீனா மீது கடுமையானதாக இல்லை” என்றும் அவர் கூறினார்.

ஹிலாரி மேலும் கூறுகையில், “சீனாவின் சுலபமான முன்னேற்றம், ட்ரம்ப் நிர்வாகம் உலகில் உருவாக்கியுள்ள குழப்பம் ஆகியவற்றை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதே நேரத்தில் நீங்கள் உங்களை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறீர்கள்.

தென்சீனக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சித்தல், இந்தியாவுடன் எல்லை மோதல்களில் ஈடுபடுவது தொடர்கிறது. கல்வான் தாக்குதலில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தென் சீனக் கடல், கிழக்கு சீனக் கடல் இரண்டிலும் சீனா கடுமையான பிராந்திய மோதல்களில் ஈடுபட்டுள்ளது. கிட்டத்தட்ட தென் சீனக் கடலின் அனைத்து பகுதிகளையும் சீனா தனதாக கூறுகிறது.

வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே மற்றும் தைவான் ஆகிய நாடுகள் இப்பகுதியில் எதிர் உரிமைகோரல்களைக் கொண்டுள்ளன. உங்களுக்குத் தெரியும், அவர் பொருத்தமற்ற, சீரற்ற வெளியுறவுக் கொள்கையுடன் அதிபராக இருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை அளித்துள்ளது. இதனை அமெரிக்காவின் முன்னாள் உயர்மட்ட தூதர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் வேறு சில வெளிநாட்டினர் தலையிட முயற்சிக்கின்றனர். இதனை ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் எச்சரித்துள்ளார்.

நமது நாட்டுக்குள் நம்பிக்கையை குறைக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. 2016ஆம் ஆண்டில் இது நடந்தது. அது மீண்டும் நடக்கிறது. அப்போது அவர், மறைமுகமாக ரஷ்யாவை குற்றஞ்சாட்டினார். இதனை அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கையாக நான் கூறுகிறேன். ஜனநாயகத்தின் எதிர்காலத்தை அமெரிக்க கட்டியெழுப்ப வேண்டும். வெளிநாடுகளுடன் உறவுகள் புதுப்பிக்கப்பட வேண்டும்.

ராஜதந்திரங்கள் மூலம் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும். நிர்வாக வெற்றி கிடைக்க வேண்டும். அமெரிக்காவை மீண்டும் வியாபாரத்தில் கொண்டுவருவதற்கு நிறைய நேரமும் முயற்சியும் தீவிர உழைப்பும் தேவைப்படும்.

இதனை கண்டிப்பாக செய்ய முடியும். சில காரணங்களால், ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவின் ஒற்றுமை மற்றும் உலகில் நம்முடைய பங்கை சரிசெய்ய மிகவும் கடினமாக இருக்கும்” என்றார்.

இதையும் படிங்க: தனிநபர் கடனா / தங்க நகைக்கடனா... சிறந்த கடன் திட்டம் எது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.