தொழில்நுட்பத்தால் நிறைந்து கிடக்கிறது தற்போதைய இணைய உலகம், இந்தக் காலத்தில் உணவில்லாமல் இருப்பார்களே தவிர இணையம் இல்லாமல் இருக்கமாட்டார்கள். காரணம் அனைத்து தரப்பு மக்களும் ஸ்மார்ட் செல்போன்கள் பயன்படுத்தி வருவதே.
இணையத்தின் உள்ளே செல்ல வேண்டும் என்றால் அனைவரும் செல்லும் இடம் கூகுள். எல்லா மக்களுக்கும் ஒரு அட்சய பாத்திரம்போல் கேட்பதையெல்லாம் அள்ளிக்கொடுத்து வருகிறது இந்த கூகுள்.
கடந்த 1998ம் ஆண்டு செப்டம்பர் 27 ஆ,ம் தேதி, அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தில் பயின்ற இரண்டு மாணவர்களால் தொடங்கப்பட்டதுதான் இந்த கூகுள் நிறுவனம். சாதாரணமாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது அசுரத்தனமாக வளர்ந்து 40 நாடுகளில் தங்களின் அலுவலகங்களை இயக்கி வருகிறது.
தொழில்நுட்ப உலகத்தை பொருத்தவரை தன்னை விட்டு நகரவே முடியாத அளவிற்கு அனைவரையும் தன்வயப்படுத்தி வைத்திருக்கும் இந்த கூகுள் நிறுவனம், தனது 23ஆவது பிறந்தநாளை இன்று(செப் .27) கொண்டாடுகிறது. அதனை பெருமைப்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம், சிறப்பு டூடுலை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: தன்பாலின திருமணத்திற்கு சுவிட்சர்லாந்து ஒப்புதல்