லண்டன்: உலகளவில் கோவிட்-19இன் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை கடந்துள்ளது, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கணக்கின்படி, இறந்த பலருக்கு வைரஸ் பரிசோதனை செய்யப்படாததால், இந்த கணக்கீடு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிரேசில் அரசு தனது நாட்டின், கரோனா பாதித்தவர்கள், மொத்த இறப்பு ஆகியவற்றின் விவவரங்களை வெளியிடுவதை நிறுத்திய ஒரு நாளுக்குப்பிறகு இந்த மைல்கல்லை எட்டியது.
விமர்சகர்கள் இந்த நடவடிக்கையை லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நாட்டில் பரவியுள்ள நோயின் உண்மையான எண்ணிக்கையை மறைக்கும் ஒரு அசாதாரண முயற்சி என்று விமர்சித்தனர்.
பிரேசிலில் இறுதியாக அதிகாரபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 34 ஆயிரத்தும் மேற்பட்டவர்கள் என்ற அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்கா, பிரிட்டனுக்கு அடுத்து உலகின் மூன்றாவது மிக அதிக எண்ணிக்கையாகும்
உலகளவில், குறைந்தது 6.9 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பால்கலைகழகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் வைரஸ் தோன்றியதில் இருந்து அமெரிக்காவில் இதுவரை கிட்டத்தட்ட 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கோவிட்-19ஆல் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐரோப்பாவில் உயிரிழப்பு 1 லட்சத்து 75ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
(AP)