உலகளவில் அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.
தற்போதைய பாதிப்பு நிலவரம்
உலகளவில் தற்போதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எட்டு கோடியே 55 லட்சத்து 20 ஆயிரத்து 216 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 18 லட்சத்து 50 ஆயிரத்து 941 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் நான்கு லட்சத்து 91 ஆயிரத்து 352 பாதிப்புகளும், ஆறாயிரத்து 231 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. மொத்தமாக, ஆறு கோடியே நான்கு லட்சத்து 86 ஆயிரத்து 965 பேர் குணமடைந்துள்ளனர்.
உலக அளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் அந்நாட்டில் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக அமெரிக்காவில், இரண்டு கோடியே 11 லட்சத்து 13 ஆயிரத்து 528 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் மட்டும் இதுவரை மூன்று லட்சத்து 60 ஆயிரத்து 78 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் இரண்டாம் இடத்திலும், நான்காம் இடத்தில் ரஷ்யா, ஐந்தாம் இடத்தில் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.
இதையும் படிங்க: தேர்தல் முடிவை மாற்ற அலுவலரை மிரட்டிய ட்ரம்ப் - அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒலிப்பதிவு!