சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போதைய பாதிப்பு நிலவரம்
இதுவரை எட்டு கோடியே 11 லட்சத்து 54 ஆயிரத்து 267 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 72 ஆயிரத்து 222ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியே 73 லட்சத்து ஐந்தாயிரத்து 67ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 83 ஆயிரத்து 678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறாயிரத்து 338 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாடுகளின் நிலவரம்
உலக அளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை அந்நாட்டில் ஒரு கோடியே 95 லட்சத்து 73 ஆயிரத்து 847 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்து 41 ஆயிரத்து 138 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. அதேவேளை உயிரிழப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
பாதிப்பு எண்ணிக்கையில் நான்காம் இடத்தில் ரஷ்யா, ஐந்தாம் இடத்தில் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.
இதையும் படிங்க: அரச குடும்பத்திலிருந்து விலகி கிறிஸ்துமஸ் கொண்டாடிய இளவரசர் ஹாரி தம்பதியினர்!