உலகளவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 48 லட்சத்து 97 ஆயிரத்து 614ஆக உள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 1 கோடியே 72 லட்சத்து 86 ஆயிரத்து 392 பேர் குணமடைந்துள்ளனர்.
முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில், 60 லட்சத்து 94 ஆயிரத்து 890 மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் மட்டும் உயிரிழப்பின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பிரேசிலில் 38 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.