சீனாவில் பரவத்தொடங்கிய கோவிட்-19 பெருந்தொற்று தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும், மற்ற நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இதன் தாக்கம் படுமோசமாக உள்ளது.
இந்நிலையில், நேற்று ஒரேநாளில் உலகளவில் புதிதாக 75,814 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,57,181ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், 7,205 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதன்மூலம், இறப்பின் எண்ணிக்கை 1,77,641ஆக உயர்ந்துள்ளது. மேலும், கோவிட்-19 தொற்றிலிருந்து இதுவரை 6,81,582 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் அமெரிக்காவில்தான் இதன் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளன. அந்நாட்டில் இதுவரை 8,19,164 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 45,340 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி உள்ளது.
இத்தாலியில் இதுவரை 1,83,957 பேர் பாதிக்கப்பட்டு, அவர்களில் 24,648 பேர் உயிரிழந்துள்ளனர். இப்பட்டியலின் தொடர்ச்சியாக ஸ்பெயினில் 21,282 பேரும், பிரான்ஸில் 20,796 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் இதுவரை 19,984 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 640 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு மருந்து - இங்கிலாந்து நாளை முதல் மனிதர்கள் மீது சோதனை!