சீனாவில் வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கி கோவிட் 19 தொற்று அந்நாட்டில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக, அமெரிக்காவிலும் ஐரோப்பா நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸிலும் இதன் தாக்கம் படுமோசமாக உள்ளது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் உலகளவில் 99,519 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,83,304இல் இருந்து 21,82,823ஆக அதிகரித்துள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 10,935 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம், உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,34,616இல் இருந்து 1,45,551ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், கோவிட் 19 தொற்றால் சிகிச்சை பெற்று இதுவரை 5,47,589 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் அமெரிக்காவில்தான் கோவிட் 19 தொற்றின் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் படுமோசமாக உள்ளது. அந்நாட்டில் இதுவரை 6,75,144 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 34,641 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவைத் தொடர்ந்து இத்தாலியில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு இதுவரை 22,170 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இத்தாலியைத் தொடர்ந்து ஸ்பெயினில் 19,315 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க: கரோனா - ஐரோப்பியாவில் உயிரிழப்பு 90 ஆயிரத்தைக் கடந்தது !