ETV Bharat / international

ரெம்டெசிவிர் மருந்தால் வேகமாக குணமாகும் கோவிட்-19 நோயாளிகள்...! - கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு

புலனாய்வுக் குழுவின் கீழ் செயல்படும் ஜிலீட் அறிவியல் இங்க். நிறுவனம் சார்பாக கண்டுபிடிக்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்தால் கோவிட்-19 நோயாளிகள் வேகமாக குணமடைவதாக அமெரிக்க தேசிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

gileads-remdesivir-drug-shows-positive-results-in-coronavirus-patients-who-require-extra-oxygen

author img

By

Published : May 25, 2020, 10:54 PM IST

அமெரிக்கா புலனாய்வுக் குழுவின் கீழ் செயல்பட்டு வரும் மருந்து நிறுவனம் ஜிலீட் அறிவியல் இங்க். இந்த நிறுவனத்தின் சார்பாக ரெம்டெசிவிர் என்று மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் பாதுகாப்புத் துறையினரிடம் அவசரமாக ஒப்புதல் பெறப்பட்டது.

இதனிடையே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வென்டிலேட்டர்கள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. தற்போது ரெம்டெசிவிர் மருந்தின் மூலம் வென்டிலேட்டர்கள் சிகிச்சையின் தேவை குறைந்ததோடு, நோயாளிகள் வேகமாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நியூ இங்கிலாந்து ஜார்னல் ஆஃப் மெடிசின் பத்திரிகையில், ''ரெம்டெசிவிர் மருந்தின் மூலம் 10 நாடுகளைச் சேர்ந்த 1063 கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ப்ளேஸ்போ (placebo) மருந்தின் மூலம் சிகிச்சைப் பெற்ற நபர்கள் 15 நாள்களில் குணமடைந்து வீடு திரும்பினர். இதேபோல் ரெமெடிவர் மருந்தின் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டவர்கள் 11 நாள்களில் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதையடுத்து ப்ளேஸ்போ மருந்தால் சிகிச்சை பெறுபவர்கள், ரெம்டெசிவிர் மருந்தால் சிகிச்சை பெறுவர்கள் ஆகிய ஒரு தரப்பினரின் மீட்பு விழுக்காடு குறித்து 15 நாள்கள் அளவீடு செய்யப்பட்டது. அதில் ரெம்டெசிவிர் மருந்தால் சிகிச்சைப் பெற்றவர்கள் முடிவுகள் நல்ல பலன்களைக் கொடுத்துள்ளன.

ஆனால் ரெம்டெசிவிர் மருந்தால் சிகிச்சைப் பெறுபவர்களின் மீட்பு விழுக்காடு 7.1 ஆகவும், ப்ளேஸ்போவால் சிகிச்சைப் பெறுபவர்களின் மீட்பு விழுக்காடு 11.9 ஆகவும் உள்ளன. இதனை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ரெம்டெசிவிர் மருந்தால் சிகிச்சைப் பெறுபவர்களின் இறப்பு விழுக்காடு அதிகமாக உள்ளதால், அதனை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது.

இதையடுத்து மே 8ஆம் தேதி தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் மையம் சார்பாக ரெமெடிசர் உடன் சில மருந்துகள் இணைத்து பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வென்டிலேட்டர் பகிர்வுக்கு புதிய வழிகளைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.