ஹனுக்கா பண்டிகையை முன்னிட்டு நியூயார்க் அருகே மொன்சே பகுதியில் அமைந்துள்ள யூத கோயில் ஒன்றில் நேற்று இரவு (உள்ளூர் நேரப்படி) பக்தர்கள் வழிபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பக்தர்கள் மீது சரமாரியாக கத்திக்குத்து நடத்திவிட்டு தப்பிச் சென்றார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் தாக்குதலில், ஐந்து பேர் படுகாயம் அடைந்ததாகப் பழமைவாத யூத மக்கள் விவகார கவுன்சில் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இது குறித்து நியூயார்க் மாநில அரசு தலைமை வழக்கறிஞர் லிடிஷியா ஜேம்ஸ் கூறுகையில், "நியூயார்க்கில் நேற்று நடந்த கத்திக்குத்து சம்பவம் மனதில் பெரும் களக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெறுப்புணர்வால் ஏற்படும் நிகழ்வுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது. இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் இனி நடைபெறாது இருக்க கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க : ரஷ்யா, சீனா, ஈரான் இந்தியப் பெருங்கடலில் கூட்டுப்பயிற்சி!