நியுயார்க்கில் கைதிகள் தொலைபேசியில் பேசும்போது, முதல் நிமிடத்திற்கு 50 சென்டுகளும் அடுத்தத்தடுத்த நிமிடங்களுக்கு கூடுதலாக 5 சென்டுகளும் கொடுத்துவந்தனர். இந்நிலையில், இலவச தொலைபேசி அழைப்புகளை வழங்கும் மசோதா கடந்தாண்டு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக பேசிய மேயர் பில் டி பிலசியோ, "நீண்ட காலமாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள கைதிகள் இன்னல்களை சந்தித்தனர். இதனை கருத்தில் கொண்டு இலவசமாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் கைதிகள் தங்களது வழக்கறிஞர், உறவினர் உள்ளிட்டோரும் தங்கு தடையின்றி தொடர்பில் இருக்க முடியும் " எனத் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் 21 நிமிடங்களுக்கு கைதிகள் இலவசமாக தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.