அமெரிக்காவில் ஸ்டேட்டன் தீவைச் சேர்ந்த ராபர்ட், அலிசன் மஹோனி ஆகியோர் நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், 'ஏப்ரல் மாதம் இடையில் தாங்கள் வளர்த்து வந்த ஏழு வயதான ஜெர்மன் ஷெப்பர்ட் (German shepherd) ரக நாய் சுவாசப் பிரச்னை காரணமாக நோய் வாய்ப்பட்டிருந்தது.
இந்த நாயை மே மாதம் பரிசோதித்த கால்நடை மருத்துவர் கரோனா தொற்று இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக எங்களிடம் கூறினார். சுவாசக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த நாயின் நாசியில் சளி ஏற்பட்டு, ரத்த வாந்தி எடுத்தது. பின் அதன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜூலை 11 ஆம் தேதி கருணைக் கொலை செய்யப்பட்டது.
இந்த நாயின் மரணத்திற்கு கரோனா நோய்த்தொற்று காரணமா என்பது தெரியவில்லை. நாய் ரத்த வாந்தி எடுத்தபோது அதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கால்நடை மருத்துவர் பரிசோதித்துப் பார்க்கையில், நாய்க்கு லிம்போமா புற்றுநோய் இருந்தது என மருத்துவர் தெரிவித்ததாக' மஹோனி கூறினார்.
நியூயார்க் மாநிலத்தில் ஜூன் மாதத்தில், அந்நாட்டு வேளாண்மைத்துறை ஜெர்மன் ஷெப்பர்ட் (German shepherd) ரக நாய்க்கு கரோனா தொற்று இருப்பதாகவும், நாட்டிலேயே கரோனா தொற்று பாதிக்கப்பட்ட முதல் நாய் எனவும் தெரிவித்திருந்தனர். ஆனால், அந்த நாயின் உரிமையாளர் குறித்து எந்தத் தகவலும் இல்லை என கூறியிருந்தனர்.
அமெரிக்க விலங்குகள் நலவாரிய அமைப்பின் கூற்றுப்படி, 12 நாய்கள், 10 பூனைகள், ஒரு புலி, ஒரு சிங்கம் ஆகியவை கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கரோனா தொற்று பரப்புவதில் விலங்குகளுக்கு எந்த பங்கும் இல்லை என இந்த அமைப்பு கூறுகிறது. ஆனால் அதே வேளையில் இந்தக் கொடிய வைரஸ் மக்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவக்கூடும் எனவும் கருதுகின்றனர்.
கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த ஜெர்மன் ஷெப்பர்ட் - கரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டிருந்த நாய் மரணம்
நியூயார்க்: ஏழு வயதான ஜெர்மன் ஷெப்பர்ட் (German shepherd) ரக நாய் ஒன்று, கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.