அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அமெரிக்க தொற்றுநோய் வல்லுநர் அந்தோணி ஃபவுசி பேசுகையில், "தேங்கஸ் கிவ்விங் டே-க்கு பின் குளிர் காலம் காரணமாகவும் பயணம் காரணமாகவும் கரோனா பரவல் வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கக் கூடும்.
மக்களை அச்சப்படுத்த நான் இதைக் கூறவில்லை. ஆனால் இதுதான் எதார்த்தம். தேங்க்ஸ் கிவ்வி டே கொண்டாட்டம் காரணமாக அனைவரும் சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பார்கள். எனவே, இப்போது நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் பயணத்தில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.
குடும்பங்கள் ஒன்றிணைவதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். வரும் குளிர்காலத்தில் குறிப்பாக, கிறிஸ்துமஸ் நெருங்கும்போது, கரோனா வழக்குகளில் அதிகளவு உயரும். இதை நாம் சமாளிக்க வேண்டும்.
தற்போது ஊருக்கு சென்றுள்ளவர்கள், பணியிடங்களுக்கு திரும்புபோது தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். முடிந்தால் கரோனா பரிசோதனையையும் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.
மேலும், தற்போதுள்ள கரோனா பரவல் காரணமாக காரணமாக கூடுதல் தளர்வுகளை அறிவிக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.அமெரிக்காவில் 1.33 கோடி பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2.66 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: அவரச அனுமதி கோரி விண்ணப்பித்துள்ள மாடர்னா