ETV Bharat / international

'தடுப்பு மருந்து விநியோகத்தில் பைடன் கவனம் செலுத்த வேண்டும்' - தொற்று நோய் வல்லுநர் - Coronavirus Task Force

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் ஜோ பைடன் கரோனா தடுப்பு மருந்து விநியோகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க தொற்று நோய் வல்லுநர் அந்தோணி ஃபவுசி கூறியுள்ளார்.

Fauci
Fauci
author img

By

Published : Dec 8, 2020, 2:50 PM IST

அமெரிக்காவில் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஃபைஸர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் கரோனா தடுப்பு மருந்திற்கு இன்னும் சில நாள்களில் ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பு மருந்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்கப்பட்டாலும்கூட, அதை முறையாக விநியோகிப்பதில் பெரும் சவால் உள்ளது. தடுப்பு மருந்தை சரியான முறையில் விநியோகித்தால் மட்டுமே லட்சக்கணக்கானோரின் உயிரை காப்பாற்ற முடியும்.

இந்நிலையில் இது குறித்து அமெரிக்காவின் தொற்றுநோய் வல்லுநர் அந்தோணி ஃபவுசி கூறுகையில், "அதிபராக ஜோ பைடன் பதவியேற்றவுடன், முடிந்தவரை அனைவருக்கும் விரைவாக தடுப்பு மருந்தை அளிக்கும் விநியோக முறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

அமெரிக்காவில் 75 முதல் 85 விழுக்காடு மக்களுக்கு விரைவில் தடுப்பு மருந்தை அளிக்க முடிந்தாலே கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். அதை செய்வதற்கு தேவையான திறன் நம்மிடம் உள்ளது.

பள்ளியில் இருக்கும் குழந்தைகளுக்கு கரோனா உறுதி செய்யப்படுவது குறைவாகவே உள்ளது. எனவே, தற்போதைய சூழலில் பள்ளிகளே மாணவர்கள் இருக்க சிறந்த இடமாக உள்ளது" என்றார்.

மேலும், கரோனா தடுப்பு மருந்து குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தை போக்க பொதுமக்களின் முன் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

முன்னதாக, கடந்த வாரம் ஃபவுசி தனது சுகாதார ஆலோசகராக இருக்க வேண்டும் என்று ஜோ பைடன் கேட்டுக்கொண்டார். ஜோ பைடனின் இந்தக் கோரிக்கையை ஃபவுசியும் ஏற்றுக்கொண்டார்.

இதையும் படிங்க: டிச.27 சர்வதேச தொற்றுநோய் தினமாக அறிவித்த ஐநா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.