நியூயார்க்கில் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இர்விங் மருத்துவ மையத்தில் (Columbia University Irving Medical Center) நடத்தப்பட்ட ஆய்வின்படி, காற்றில் பறக்கும் தீநுண்மி துளிகளை 99.9 விழுக்காடு யுவிசி விளக்கு (UVC LIGHT) வெளிச்சத்தின் மூலம் அழிக்க முடியும் எனக் கண்டறிந்துள்ளனர்.
இந்த விளக்கு மூலம் கரோனா தீநுண்மியை 95 விழுக்காட்டை 11 நிமிடங்களிலும், 99 விழுக்காட்டை 16 நிமிடங்களிலும், 99.9 விழுக்காட்டை 25 நிமிடங்களிலும் அழிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, யுவிசி விளக்குகளைப் பொது இடங்களில் பொருத்துவதன் மூலம் இன்ஃப்ளூயன்ஸா போன்ற பிற தீநுண்மிகளுடன் கரோனா தீநுண்மி பரவும் இடரையும் குறைக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.