அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரை, காவலர் ஒருவர் சுமார் எட்டு நிமிடம் 56 நொடிகள் சோக் ஹோல்ட் (choke hold) எனப்படும் கோரப் பிடியில் வைத்திருந்தார். ஜார்ஜ் ஃப்ளாய்ட் தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று பலமுறை கதறியும், காவலர் தனது பிடியைத் தளர்த்தவில்லை. காவலரின் இந்த மூர்க்கத்தனமான செயலால் கடைசியில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளைக் கண்டித்தும் அந்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் நியூயார்க் நகரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜார்ஜ் ஃப்ளாய்ட்டை மூர்க்கத்தனமாகத் தாக்கிய நியூயார்க் காவல் துறையினருக்கு எதிராகப் பேரணியாகச் சென்றனர். இதில் காவல் துறையினரின் வன்முறையால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
நியூயார்க் காவல் துறையினருக்கு ஒதுக்கப்படும் நிதியினை உடனடியாக நிறுத்தவும் இந்தப் பேரணியில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். மேலும், இந்தப் பேரணியில் ஈடுபட்டவர்கள், ஜார்ஜ் ஃப்ளாய்ட்டை காவல் துறையினர் நடத்திய விதத்தில் வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் இல்லை என்றும், இனிவரும் காலங்களிலாவது காவல் துறையினர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
மேலும், காவலர்களின் குற்ற விவரங்களை வெளியிட மறுக்கும் சட்டத்தை நீக்கக்கோரியும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜார்ஜ் ஃப்ளாய்ட் போராட்டம் - அடிமைகளை விற்றவரின் சிலை அகற்றம்