ETV Bharat / international

அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்குமா, நடக்காதா? - அமெரிக்காவில் கரோனா

அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து என்ன கூறுகிறது என்பதை அறிய அந்நாட்டு மக்கள் அமெரிக்க வரலாற்றை ஆராய்ச்சி செய்வதில் அனைவரும் மும்முரமாக உள்ளனர். உண்மையில் அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்கமுடியுமா?... என்ன சொல்கிறது அமெரிக்க அரசியலமைப்பு.....!

Challenges ahead of US Polls 2020
Challenges ahead of US Polls 2020
author img

By

Published : Jun 16, 2020, 4:36 AM IST

தற்போது கரோனா குறித்த அச்சம் ஒருபக்கம் இருக்க, இனிவரும் காலங்களில் வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கேள்வி பொருளாதார ரீதியாக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. உணவு, உடை உள்ளிட்ட பல தேவைகள் நிமித்தம் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அமெரிக்கா தனது குடிமக்களைப் பாதிக்கும் மற்றொரு முக்கியமான கேள்வியைப் பற்றி கவலை கொண்டுள்ளது.

அந்தக் கேள்வி, அமெரிக்க அதிபர் பதவிக்கு நடைபெறவிருக்கும் தேர்தல் தடையின்றி நடக்கப் போகிறதா? அல்லது நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக தேர்தல் ஒத்திவைக்கப்படப் போகிறதா? என்பதுதான். கோவிட்-19 பரவல் காலங்களில் தகுந்த இடைவெளியை மனதில் வைத்துக்கொண்டு வாக்களிக்க பல்வேறு வழிமுறைகள் வாக்காளர்களுக்காக உருவாக்கப்படுகின்றன.

ட்ரம்ப் அதற்கு ஏன் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கவில்லை?

தமிழ்நாட்டில் அதிமுக, திமுக மட்டும் எப்படி பெரும்பாலான மக்களிடமிருந்து வாக்குகளைப் பெற்றுக் கொள்கிறதோ? அதைப் போலவே, அமெரிக்காவில் பெரும்பாலான வாக்காளர்கள் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரண்டிற்குதான் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.

இந்தாண்டு வழக்கம்போல அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடத்தப்படுமா? ஒருவேளை தேர்தல் நடந்தால், அது எவ்வாறு நடத்தப்படும். அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் தவிர பிற நாடுகளும் இந்தத் தேர்தலை ஆவலுடன் எதிர்பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது. கரோனா ஏற்படுத்திய நெருக்கடிகளுடன், சமீபத்தில் அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் குறித்து டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோரால் கூறப்படும் கருத்துக்கள் இந்த தேர்தலில் முக்கிய பங்காற்றுகின்றன. இதனுடைய பிரதி உபகாரங்களை அறிந்துகொள்ள நிச்சயம் அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடத்தப்பட வேண்டும்.

அமெரிக்க அரசியலமைப்பு என்ன கூறுகிறது?

அமெரிக்காவில் எவ்வித தேர்தலையும் ஒத்திவைக்கமுடியும். ஆனால் அதிபர் தேர்தலை ஒத்தி வைக்கமுடியாது. ஏனென்றால் அதிபர் தேர்தல் நடைபெற வேண்டிய தேதி அமெரிக்க அரசியலமைப்பால் தெளிவாக நிர்ணயிக்கப்பட்டது. அதிபரும், துணை அதிபரும் பதவியேற்ற நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த ஆண்டின் நவம்பர் முதல் திங்கள் கிழமைக்கு அடுத்த செவ்வாயன்று புதிய அதிபரையும் துணைஅதிபரையும் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று அமெரிக்க அரசியலமைப்பு கூறுகிறது.

இந்தக் குறிப்பிட்ட தேதியை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டால் அரசியலமைப்பில் திருத்தம் செய்யவேண்டும். திருத்தம் செய்வதற்கு ட்ரம்ப் தயாராக இருந்தாலும், ஜனநாயகக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை அதற்கு உடன்படுமா என்பது கேள்விக்குறிதான். ட்ரம்ப் எதிர்ப்பு கலவரங்கள் புறக்கணிக்கப்பட்டாலும் கரோனாவின் காரணமாக மக்கள் வெளியே வந்து வாக்களிக்க முடியாத மோசமான நிலைமை தேர்தல் ஒத்திவைப்புக்கு வழிவகை செய்கிறது. இதை ஆதரிப்பதைத் தவிர ஜனநாயகக் கட்சியினருக்கும் தற்போது வேறு வழியில்லை.

அதிபர் தேர்தல் நான்கு மாதங்களுக்குப் பிறகு நடக்குமா? இல்லையா? என்பது முற்றிலும் கரோனா தொற்றுநோயின் தாக்கத்தைப் பொறுத்தது. ஒருவேளை தேர்தல் ஒத்திவைப்பதற்கான அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டால், அது நிச்சயமாக பரபரப்பாக இருக்கும். ஒருவேளை திருத்தம் செய்யப்பட்டாலும்கூட புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படும்வரை டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில் இருக்க முடியாது.

அமெரிக்க அரசியலமைப்பின்படி - அமெரிக்காவின் அதிபர் பதவிக்காலம் 4 ஆண்டுகள் மட்டுமே, அதன்படி ட்ரம்ப்பின் பதவிக்காலம் ஜனவரி 20ஆம் தேதியுடன் காலாவதியாகிறது. புதியவர்களை அதிபராகத் தேர்ந்தெடுப்பதற்கும், இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த முறை (ஜனவரி மாதத்திற்கு பிறகு) தேர்தலை ட்ரம்ப் ஒத்திவைத்தாலும், அமெரிக்க அரசியலமைப்பின்படி 2021 ஜனவரி 20 அன்று அவர் பதவி விலக வேண்டியிருக்கும். அதன் பிறகும் தேர்தல்கள் நடைபெறவில்லை என்றால், பிரதிநிதிகள் சபை (காங்கிரஸ்) தற்காலிகமாக ஒரு புதிய அதிபரையும், செனட் சபை துணை அதிபரையும் தேர்ந்தெடுக்கும்.

காங்கிரஸின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் தேர்தல்கள் நடத்தப்படாவிட்டால், அதிபரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு செனட் சபையிடம் (இது நமது மாநிலங்களவை போன்றது) இருக்கும். இருப்பினும், இவை அனைத்தும் அமெரிக்க வரலாற்றில் ஒருபோதும் நடந்ததில்லை.

கடந்த மாதம் அமெரிக்காவின் முன்னாள் துணைத்தலைவர் பிடென், "கவனியுங்கள்! ட்ரம்ப் ஏதாவது செய்வதன் மூலமோ அல்லது சொல்வதன் மூலமோ தேர்தலை ஒத்திவைக்க முயன்றால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை" என்றார்.

ட்ரம்ப் இந்தக் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தார். வெள்ளை மாளிகையின் ஆலோசகர் குஷ்னர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், "எனக்கு நிச்சயமாகத் தெரியாது, ஆனால் நாட்டில் கரோனா தாக்கம் காரணமாக வரவிருக்கும் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன” எனக் குறிப்பிட்டிருந்தார். இது அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் சில குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அரசியலமைப்பு தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து என்ன கூறுகிறது என்பதை அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர். இதுபோன்ற நிலைமை கடந்த காலத்திலும் இருந்ததா? என்று அமெரிக்க வரலாற்றை ஆராய்ச்சி செய்வதில் அனைவரும் மும்முரமாக உள்ளனர்

ஜனநாயகக் கட்சியினர் ஊக்குவிக்கப்படுவதை ட்ரம்ப் விரும்பவில்லை!

கரோனா ஆக்ரோஷமாக பரவினாலும், அமெரிக்காவில் வரவிருக்கும் தேர்தல்களை சரியாக நடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பொது வாக்களிப்பு தவிர, வர இயலாதவர்கள் வாக்குச்சீட்டு, தபால் மூலம் வாக்களித்தல் மற்றும் முன் வாக்களிப்பு போன்ற நடைமுறைகள் தேர்தலுக்கு சில நன்மைகளை பயக்கும்.

வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நிற்காமல் வாக்குகளை தபால் மூலம் அனுப்பலாம். இதுபோன்ற பல நடைமுறைகள் ஏற்கனவே அமெரிக்க தேர்தல் நடைமுறையின் ஒரு பகுதியாகும். ஆனால் அவை குறிப்பிட்ட நிகழ்வுகளிலும் சில நோக்கங்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

யாரும் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்காமல், வாக்குகளை அஞ்சல் மூலம் வாக்களிக்கும் முறை அனைவருக்கும் பொருந்த வேண்டும் என்று ஜனநாயகவாதிகள் பரிந்துரைக்கின்றனர்.

இருப்பினும் குடியரசுக் கட்சியினர், குறிப்பாக தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த முறையை அனைவருக்கும் பயன்படுத்தத் தயாராக இல்லை.

"இந்த முறைகள் வயதானவர்களுக்கும், ஊனமுற்றோருக்கும், வீட்டிற்கு வர முடியாத ராணுவ வீரர்களுக்கும் நல்லது. ஆனால் அனைத்து பொது மக்களுக்கும் தபால் வாக்குச்சீட்டு என்பது சரியானதாக இருக்காது. இந்த முறையில் ஏராளமான மோசடிகள் நடக்கலாம். தபால் வாக்குச் சீட்டு முறையில் கையாளுதலில் ஆபத்து உள்ளது. எல்லோரும் இத்தகைய மோசடி முறைகளைப் பின்பற்றினால், குடியரசுக் கட்சி இனி அமெரிக்காவில் ஆட்சிக்கு வரவே முடியாது. எனவே, இதை நாங்கள் எதிர்க்கிறோம் ”என்று ட்ரம்ப் கூறினார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் ‘தபால் மூலம் வாக்களித்தல்’ மற்றும் ‘வர இயலாதவர் வாக்களிப்பு’ விதிமுறைகள் ஒன்றாகவே இருக்கிறது. எனவே இது எந்த அளவிற்கு விளைவுகளை கொடுக்கும் என்று சொல்ல முடியாது. இந்தப் பின்னணியில், நான்கு மாதங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் கரோனா தாக்கம் எவ்வாறு உணரப்படும் என்பதைப் பொறுத்து தேர்தல் அதிர்ஷ்டம் இருக்கும்.

வர இயலாதவர் வாக்குச்சீட்டு

நமது நாட்டில் இருக்கும் தபால் வாக்கு போன்றதுதான் அமெரிக்காவின் 'வர இயலாதவர் வாக்குச்சீட்டு’. குறிப்பிட்ட தேர்தல் நாளில் வாக்களிப்பதற்காக வாக்காளர் வாக்குச்சாவடிக்குச் செல்ல முடியாவிட்டால் தபால் மூலம் இந்த வாய்ப்பைப் பெற முடியும்.

தபால் மூலம் வாக்களித்தல்

வாக்குச்சீட்டு தபால் மூலம் வாக்காளருக்கு அனுப்பப்படும். அதை பெற்றுக்கொண்ட வாக்காளர் அருகிலுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும். அல்லது அதனை தபால் மூலமாகவும் அனுப்பலாம்.

முன்கூட்டியே வாக்களித்தல்

இந்த முறை வாக்குப்பதிவு நாளில் வாக்களிப்பதைவிட முன்கூட்டியே வாக்களிப்பதிற்கு வாய்ப்பளிக்கிறது. இந்த முறைகள் அனைத்தும் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விதமாக செயல்படுகின்றன. பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் ஒருவர் முதலில் இந்த வாக்களிப்பு முறையை விரும்புவதற்கான காரணங்களையும், அத்தகைய வாக்களிப்பு முறைக்கு தேவையான காரணங்களையும் குறிப்பிட வேண்டும். இது சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியின் ஒப்புதலுக்குப் பிறகுதான் நடக்கும்.

வரலாறு என்ன சொல்கிறது?

பரப்புரை காலத்துக்கு சட்டப்பூர்வ வரையறை அளிக்கப்படும், பிரிட்டன் பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ளதைப் போல அல்லாமல், அமெரிக்காவில் வேட்பாளர்கள் விரும்பும் காலம் முன்னதாக பரப்புரையைத் தொடங்கிடலாம். அதிபர் தேர்தல் பணிகள் தொடங்கி முடிவடைவதற்கு சுமார் 18 மாதங்கள் ஆகின்றன.

இப்போதுவரை, அமெரிக்க அதிபர் தேர்தல் ஒருபோதும் ஒத்திவைக்கப்பட்டதில்லை. முதலாம் உலகப் போரின்போதும், அமெரிக்க உறுதியற்ற தன்மைக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்த 1864 உள்நாட்டுப் போரின் போதும் கூட அதிபர் தேர்தல்கள் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஈரானில் மன்னர் ஆட்சிக்கு வழிவகுத்த அமெரிக்கா - ரகசிய ஆவணங்கள் செல்லும் உண்மை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.