அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் வசிக்கும் தம்பதியினருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சுகாதாரத் துறையினர் அவர்களின் ஆறு வயது நாயை கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நாய்க்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால், நாய்க்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் நாய்க்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.இருப்பினும், நாய்கள் மூலம் மனிதர்களுக்கு கரோனா தொற்று பரவாது என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா வைரஸை எதிர்த்து போராடும் மருந்துகள் உள்ளன: அமெரிக்கா ஆய்வு