ETV Bharat / international

குடியரசுக் கட்சி தேசிய மாநாட்டின் உள்நிகழ்வும் அதிபர் டிரம்ப்பின் உரையும் - குடியரசுக் கட்சி தேசிய மாநாடு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை குடியரசுக் கட்சி தேர்தல் வேட்பாளராக அறிவித்து அக்கட்சி நடத்திய மாநாட்டின் குறித்து மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மா சர்வதேச வெளியுறவுத்துறை நிபுணர்களிடம் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம் இதோ.

ட்ரம்ப்
ட்ரம்ப்
author img

By

Published : Aug 28, 2020, 10:26 PM IST

குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டின் நிறைவு நாளான இன்றைய தினம், ஆளும் கட்சியின் அதிபர் பதவி வேட்பாளர் ஆக டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதற்கு, அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 1,80,000 பேருக்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்துள்ளதோடு, இன்னமும் பலரை பலி வாங்கிக் கொண்டிருக்கும் கரோனா தொற்று நோய் பரவியுள்ள சூழலில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், பெரும்பாலும் முகக்கவசம் அணிந்து கொள்ளாமலும், வெள்ளை மாளிகையின் புல்வெளி வளாகத்தில் அமர்ந்திருந்த பிரதிநிதிகளிடம், டிரம்ப்பை அவரது மகள் இவாங்கா டிரம்ப் அறிமுகப்படுத்தினார். இவாங்கா தனது உரையில் தனது தந்தையை ‘மக்களின் அதிபர்’ என்றும் அரசியல் ரீதியில் சில தவறுகளைச் செய்திருந்தாலும் கூட ‘அமெரிக்காவை மீண்டும் மேன்மையான நிலைக்கு உயர்த்துவதற்கு’ அயராது பாடுபடுபவர் என்றும் புகழ்ந்துரைத்தார்.

“எனது தந்தையார் உறுதியான தீர்மானங்களைக் கொண்டிருப்பவர். தனது நம்பிக்கைகள் என்ன என்பது அவருக்குத் தெரியும், மேலும் தான் நினைப்பதைத் தான் அவர் சொல்கிறார். நீங்கள் அவரை ஒப்புக்கொள்ளலாம் அல்லது ஒப்புக்கொள்ளாமல் போகலாம், ஆயினும் அவரது நிலைப்பாடு என்ன என்பது உங்களுக்கு எப்போதுமே தெளிவாகத் தெரியும். எனது தந்தையின் தகவல் தொடர்புப் பாணி, அனைவரின் விருப்பத்துக்கும் ஏற்றதாக இருக்காது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவரது சுட்டுரைகள் (ட்வீட்டுகள்) கொச்சையாக இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தக் கூடும் என்பதை நான் அறிவேன். ஆனால் அதன் விளைவுகள் அதன் சிறப்பை உணர்த்தும்” என்றார் இவாங்கா டிரம்ப்.

டிரம்ப் தனது ஏற்புரையில், தனது எதிர்த் தரப்பு வேட்பாளரான ஜோ பிடெனையும் அவரது கடந்த 47 ஆண்டுக் கால நாடாளுமன்றச் செயல்பாடுகளையும் குறி வைத்து விமர்சிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். ஜனநாயகக் கட்சியினரை ‘கலகக்கார தீவிர இடதுசாரிகள்’ என்று வர்ணித்த அவர், ஜனநாயகக் கட்சியினரின் ஆட்சி நடைபெறும் மின்னபொலிஸ், கெனோஷா போன்ற நகரங்களில் மட்டுமே இனப் பிரச்சனைகள் தொடர்பாகவும் கருப்பின மக்களின் வாழ்க்கைப் போராட்டம் தொடர்பாகவும் வன்முறைகளும் கலவரங்களும் வெடிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். “நமது நாட்டின் வரலாற்றில் இது மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். இதற்கு முன்னர் எப்போதுமே வேட்பாளர்களுக்கு, இரண்டு கட்சிகள், இரண்டு லட்சியங்கள், இரண்டு தத்துவங்கள் அல்லது இரண்டு செயல்திட்டங்களில் ஒன்றைச் சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தெளிவான வாய்ப்பைப் பயன்படுத்தும் சூழ்நிலை எழுந்ததில்லை. அமெரிக்கர்களின் லட்சியக் கனவை நாம் காப்பாற்றப் போகிறோமா அல்லது நாம் போற்றிப் பாதுகாத்து வரும் நமது வளமான எதிர்காலத்தை அழிக்கின்ற சோஷலிஸச் செயல்திட்டத்தை அனுமதிக்கப் போகிறோமா என்பதை இந்தத் தேர்தல் முடிவு செய்யும்” என்று டிரம்ப் பேசினார்.

“மேலும், அமெரிக்காவின் வாழ்க்கை வழிமுறையை நாம் பாதுகாக்கப் போகிறோமா அல்லது அதனை முழுமையாகக் களைந்தெறிந்து அழிக்கக் கூடிய கலக நடவடிக்கையை நாம் அனுமதிக்கப் போகிறோமா என்பதையும் இந்தத் தேர்தல் முடிவு செய்யும். ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் ஜோ பிடெனும் அவரது கட்சியினரும், அமெரிக்காவை இன ரீதியிலும், பொருளாதார, சமூக ரீதியிலும் அநீதிகளை இழைக்கின்ற நாடு என்று மீண்டும் மீண்டும் வசை பாடினர். ஆகையால் இன்றைய இரவில், நான் உங்களிடம் ஒரு எளிய கேள்வியை எழுப்புகிறேன்: நமது நாட்டின் பெருமையைச் சீர்குலைப்பதிலேயே நேரம் முழுவதையும் செலவிடுகின்ற ஜனநாயகக் கட்சிக்கு, இந்த நாட்டுக்குத் தலைமை தாங்க வாய்ப்பு அளிக்குமாறு கேட்கின்ற தகுதி இருக்கிறதா?” என்று தனது 71 நிமிட நீண்ட உரையின்போது டிரம்ப் கேள்வி எழுப்பிப் பேசினார்.

மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மா கலந்துரையாடல்

ஆக, கடந்த வாரம் இணைய வழியில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டை விட, நேரடியாக நடைபெற்ற குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு எந்த வகையில் மாறுபடுகிறது? அமெரிக்க அதிபர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருக்கின்ற, வரலாற்றுச் சிறப்பு மிக்க வெள்ளை மாளிகையை, ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியின் மாநாட்டுக்காக, அரசியல் சாதனம் போல் பயன்படுத்தியிருப்பதைப் பலரும் விமர்சித்துள்ளனர். டிரம்ப்பை சிறந்த மனிதநேயராகக் காட்டுவதற்கும், மாநாட்டில் குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்தெடுத்துப் பேச வைத்ததன் மூலம் அவரை மிகுந்த கருணை உள்ளவராகவும் அக்கறை கொண்டவராகவும் சித்திரிப்பதற்கும் முயற்சி நடைபெற்றதா? நவம்பரில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலின் முடிவுகளைத் தீர்மானிக்கக் கூடிய முக்கியமான பிரச்சனைகள் என்ன? “அமெரிக்கத் தேர்தல் களம் 2020” (#பேட்டில்கிரவுண்ட்யுஎஸ்ஏ2020) சிறப்புத் தொடரின் இந்த அத்தியாயத்தில், குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிலும் டிரம்ப்பின் அதிகாரப்பூர்வ ஏற்புரையிலும் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மூத்த இதழியலாளர் ஸ்மிதா சர்மா விவாதிக்கிறார்.

வாஷிங்டன் நகரில் இருந்து மூத்த இதழியலாளரும் சிறப்புக் கட்டுரையாளருமான சீமா சிரோஹி கூறியதாவது: “வெள்ளை மாளிகையின் புல்வெளியில் கூடியிருந்த சுமார் 1,500 பேரில், ஒருசிலர் மட்டுமே முகக்கவசம் அணிந்திருந்தனர். அது வெளிப்படையாகவே நன்கு தெரிந்தது. இருக்கைகளும் ஒருவருக்கு ஒருவர் மிக நெருக்கமாக இருக்கும் வகையில் போடப்பட்டிருந்தன. கரோனா தொற்று நோய் பாதிப்பே ஏற்படவில்லை என்பதுபோல் அது இருந்தது. பேச்சாளர்களில் ஒருவர் கரொனா தொற்று நோயை ஏதோ இறந்தகால விஷயத்தைப் போல பேசினார். அந்த வகையில் இது ஏதோவொரு வித்தியாசமான யதார்த்தம் போல, வேறு ஏதோ ஒரு உலகத்தைப் போல இருந்தது.

வெள்ளை மாளிகைக்குச் செல்லும் நுழைவாயில்களில் ஒன்றில் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது, நுழைவுவாயில் பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வாஷிங்டனில் நாளை மிகப் பெரிய பேரணி நடைபெற உள்ளது. இவை இரண்டும் ஏதோ இரண்டு வெவ்வேறு நாடுகளைப் போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்துகிறது. இதுபோன்ற தோற்றம் முன்பேயே இருந்த போதிலும் கூட, இன்றைய தினம் இது குறிப்பிட்டுச் சொல்லத் தக்க வகையில் வெளிப்படையாகவே இருந்தது.”

“அமெரிக்கா இப்போது எப்படி இருக்கிறது, எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பான டிரம்ப்பின் கண்ணோட்டம் குறித்து இன்று நாம் கேட்டோம். இதேபோல், அமெரிக்கா எப்படி இருக்கிறது, எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த பிடெனின் பிரசாரத்தை சில தினங்களுக்கு முன்பு கேட்டோம். இந்த இரண்டு விவரிப்புகளுமே சரிசமமாக, ஒரு வகையில் ஏற்புடையதாகவும் மறு வகையில் ஏற்க இயலாததாகவும் உள்ளன. இவற்றில் யாருடைய விளக்கம், பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெறுவதில் வெற்றி பெறுகிறதோ, அதுதான் தேர்தலின் முடிவையும் தீர்மானிக்கும்” என்று வாதிடுகிறார் தி ஹிந்து நாளிதழின் இணை ஆசிரியர் வர்கீஸ் கே ஜார்ஜ். வர்கீஸ், ‘வெளிப்படையான அரவணைப்பு: மோடி மற்றும் டிரம்ப் காலகட்டத்தில் இந்திய-அமெரிக்க உறவுகள்’ (ஓபன் எம்ப்ரேஸ்: இந்தோ-யுஎஸ் டைஸ் இன் த ஏஜ் ஆஃப் மோடி அண்ட் டிரம்ப்) என்ற நூலின் ஆசிரியரும் ஆவார்.

“டிரம்ப் மற்றும் பிடென் ஆகிய இருவர் எடுத்துரைத்த விவரிப்புகளுக்கு இடையேயான போட்டியில், டிரம்ப் இன்றைய தினம் முன்வைத்த விவரிப்பில், ‘நாங்கள் வைரஸைப் பொருட்படுத்துவதில்லை, வைரஸுக்கு அடிபணியாத நாகரீகத்தைச் சேர்ந்த நாங்கள், அதனை எதிர்த்துப் போராடி அதனை வெற்றி கண்டு, அழித்தொழிப்போம்’ என்ற உட்பொருள் பொதிந்திருந்தது. இதுதான் அமெரிக்க மக்களுக்கும், உலகுக்கும் முன்பாக அமெரிக்க வரலாறு குறித்து டிரம்ப் முன்வைத்துள்ள நேரியல் வர்ணனை. மத்தியக் கிழக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகத்தான் ஈராக்கில் போரிடுவதற்கு அமெரிக்கர்கள் சென்றார்கள் என்று உண்மையிலேயே நம்புகின்ற நாடு அமெரிக்கா” என்று அவர் மேலும் கூறினார். கடந்த 2016 தேர்தலின்போதே வாஷிங்டனில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டவர் வர்கீஸ் ஜார்ஜ்.

குடியரசுக் கட்சி மற்றும் பாரதிய ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளின் அரசியல் கொள்கைப் பிரசாரங்களில் உள்ள ஒற்றுமைகளை அலசுகின்ற அவர், சாதி எல்லைகளைக் கடந்து சென்று பெரிய அளவிலான ஹிந்து- ஹிந்துத்துவ செயல் திட்டத்தை நிறைவேற்ற பிரதமர் மோடி செயல்பட்டதையும், அதேபோல, கருப்பின மக்களின் வாழ்வியல் போராட்டப் பிரச்சனையைப் பொருத்தவரை, அமைப்பு ரீதியிலான இனவாதத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெறும் சூழலில், ஆப்பிரிக்க- அமெரிக்க சமுதாயத்தினரின் ஆதரவைக் கூடப் பெற்று விடும் படியாக, பெரிய அளவிலான கத்தோலிக்க மத நம்பிக்கையைத் தூண்டும் வகையில், பழமைவாத கிறிஸ்தவ மதப் பிரசார தொனியில் டிரம்ப் பேசுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது ஏற்புரையில், பெய்ஜிங்குக்கு மிக இணக்கமாக பிடென் நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டிப் பேசிய டிரம்ப், ‘ஒருவேளை ஜோ பிடென் தேர்ந்தெடுக்கப்பட்டால் சீனா, நமது நாட்டையே அதற்குச் சொந்தமாக்கி விடும்’ என்று எச்சரித்தார். இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேத்துக்கு மாற்றியது, அமெரிக்காவின் வழிகாட்டுதலில் யுஏஇ மற்றும் இஸ்ரேல் இடையே அமைதி உடன்பாடு ஏற்பட்டது ஆகியவற்றையும் டிரம்ப் முக்கியத்துவப்படுத்திப் பேசினார்.

“நான் பதவியேற்ற போது, மத்தியக் கிழக்கில் பெரும் குழப்பம் சூழ்ந்திருந்தது. ஐ.எஸ்.ஐ.எஸ். வெறியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. ஈரானின் கை மேலோங்கியிருந்தது, ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போருக்கு முடிவே இல்லை என்பது போன்ற நிலைமை இருந்தது. பயங்கரமான, ஒருதரப்பான ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை நான் வெளியேறச் செய்தேன். எனக்கு முன்பு இருந்த பல அதிபர்களைப் போலன்றி, இஸ்ரேலின் உண்மையான தலைநகரை நான் அங்கீகரித்ததுடன், நமது தூதரகத்தை ஜெருசலேத்துக்கு மாற்றினேன். இதுதான் எதிர்கால இடம் என்று வெறும் வாய் வார்த்தையாகக் கூறாமல், அதனை நாம் கட்டவும் செய்தோம்” என்றார் டிரம்ப்.

“கோலன் மலைப் பிரதேசத்தில் இஸ்ரேலுக்கு உள்ள மேலாதிக்கத்தையும் நாம் அங்கீகரித்துள்ளோம். அத்துடன் கடந்த 25 ஆண்டுகளில் முதன்முறையாக நடப்பு மாதத்தில், மத்தியக் கிழக்கு அமைதி ஒப்பந்தத்தையும் சாதித்துக் காட்டியுள்ளோம். அதுதவிர, ஐஎஸ்ஐஎஸ் ஆட்சி அதிகாரத்தை நூறு சதவிகிதம் துடைத்தெறிந்து விட்டோம், அந்த அமைப்பின் நிறுவனரும் தலைவருமான அபு பக்கர் அல்-பக்தாதியைக் கொன்றோம். பின்னர், மற்றொரு நடவடிக்கையில், உலகின் முதல் தர பயங்கரவாதியான காஸிம் சுலைமானியை அழித்தோம். முந்தைய அரசுகளைப் போலன்றி, நான் அமெரிக்காவை போரில் ஈடுபடுத்தாமல் வைத்துள்ளேன் – அத்துடன், நமது படை வீரர்கள் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பி வருகின்றனர்” என்று டிரம்ப் மேலும் கூறினார்.

வன்முறை பயங்கரவாதத் தடுப்பில் தீவிர கவனம் செலுத்துகின்ற மைத்தாஸ் லேப்ஸ் நிறுவன சிஈஓ-வான பிரியங்க் மாத்தூரிடம், மத்தியக் கிழக்குப் பகுதிக்கான டிரம்ப்பின் அமைதி நடவடிக்கை மற்றும் பாக்தாதி அல்லது சுலைமானி போன்றோரைக் கொன்றது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை தேர்தலைத் தீர்மானிக்கும் விஷயங்களாக எதிரொலிக்குமா என்று ஸ்மிதா சர்மா கேள்வி எழுப்பினார். “பொதுவாக, அமெரிக்கத் தேர்தல்களில் வெளியுறவுக் கொள்கை என்பது வெற்றியைத் தீர்மானிக்கும் விஷயமாக எதிரொலிக்காது. ஆனால், தற்போது இரண்டு விதங்களில் அவ்வாறு எதிரொலிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஏனெனில் தற்போதைய சூழல் வித்தியாசமானது. வெளியுறவுக் கொள்கையில் இஸ்ரேலுக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. வலதுசாரியினர் இடையே மத நம்பிக்கை பெரும் பங்காற்றுகிறது. கிறிஸ்தவ இறையியல் வலதுசாரி மத நம்பிக்கையோடு இஸ்ரேல் மிக நெருக்கமாக உள்ளது” என்கிறார் பிரியங்க் மாத்தூர்.

அமைதி உடன்படிக்கையின் நிறை குறைகள் எப்படிப் பட்டதாக இருந்தாலும், மத நம்பிக்கை உள்ளவர்கள் இடையே இது அதிர்வலைகளை உருவாக்கும் என்று அவர் வாதிடுகிறார். “காஸிம் சுலைமானியோ அல்லது பாக்தாதியோ, ஒஸாமா பின் லேடனைப் போன்ற பெரிய நபர்கள் அல்ல. ஆனால், அதுபோன்ற நிலைமையை உருவாக்க அவர்கள் முயன்றாக நீங்கள் கூற முடியும். டிரம்ப் தரப்பினர், அவர்களைத் தங்களது பின் லேடன் என்றும் அவர்களைத் தாங்கள் கொன்று விட்டதாகவும் கூற முயலுகின்றனர். இதில் உள்ள உண்மை என்னவென்றால், பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு காஸிம் சுலைமானி என்றால் யார் என்றே தெரியாது” என்றார் பிரியங்க் மாத்தூர். ஒபாமா ஆட்சிக் காலத்தில், ஒஸாம் பின் லேடனை அமெரிக்கக் கடற்படை அதிரடி வீரர்கள் சுட்டுக் கொன்றபோது, அமெரிக்கத் தெருக்களில் உற்சாகக் கொண்டாட்டங்கள் நடைபெற்றதை அவர் நினைவுகூர்ந்தார்.

கரானோ வைரஸ் காரணமாக அனுமதிக்கப்படும் தபால் வாக்குகள் தொடர்பாக அமெரிக்காவில் எழுந்துள்ள சர்ச்சை குறித்தும், வாக்காளர்களின் கவலைகள் நியாயமானதா என்பது குறித்தும் இந்த விவாதத்தில் கவனம் செலுத்தப்படுள்ளது. முந்தைய தேர்தல்களில் நடந்ததைப் போல், தேர்தல் முடிவடைந்த உடனேயே இந்த முறை முடிவுகள் அறிவிக்கப்படாது என்பதால், நவம்பர் 4-ஆம் தேதிக்குப் பதிலாக முடிவுகள் வெளியாக ஒரு வார காலம் தாமதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில், விவாதத்தில் பங்கேற்றோர் இந்தத் தேர்தல் குழப்பமான முடிவையே தரும் என்று கருதுகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.