உலகளாவிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப (global aerospace and defense technology) நிறுவனமான நார்த்ரோப் க்ரூமன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான உணவு பொருள்களையும், அத்தியாவசிய தேவைகளையும் சிக்னஸ் சரக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது.
இந்த விமானம் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி விண்வெளி தளத்திற்கு சென்றடைந்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிக்னஸ் சரக்கு விமானம் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாசா நிலையத் தலைவர் கிறிஸ்டோபர் காசிடி கூறுகையில், "சிக்னஸ் சரக்கு விமானம் அமைப்பு சுற்றுப்பாதை ஆய்வகத்திலிருந்து விலகிச் செல்வதை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா போரில் வெற்றி கண்ட வியட்நாம் - திட்டங்களும் நடவடிக்கைகளும்..!