ETV Bharat / international

கரோனாவுக்கான மருந்துகள் அனைத்தையும் அமெரிக்காவே வாங்குகிறது - உலக சுகாதார அமைப்பு - டெட்ரோஸ் அதானோம்

ஜெனீவா: கரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மருந்துகள் அனைத்தையும் அமெரிக்கா மட்டுமே வாங்குகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

WHO chief
WHO chief
author img

By

Published : Jul 2, 2020, 2:42 PM IST

கோவிட்-19 தொற்றின் தாக்கம் காரணமாக உலக நாடுகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அமெரிக்காவில் இந்த வைரஸ் தொற்று காரணமாக 1.30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த மோசமான சூழ்நிலையை கட்டுப்படுத்த அதிபர் ட்ரம்ப் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டுகளும் பரவலாக எழுந்துள்ளன. மேலும், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம், ஹைட்ராக்ஸி குளோரோகுயின், ரெம்டேசிவிர் உள்ளிட்ட மருந்துகளையும் அமெரிக்கா ஒட்டுமொத்தமாக வாங்கி குவிப்பதாகவும் பல்வேறு நாடுகளும் குற்றஞ்சாட்டுகின்றன.

இந்நிலையில், கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை அளிக்க உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ள மருந்துகளை அமெரிக்கா வாங்கி குவித்துவருவது குறித்து தங்களுக்குத் தெரியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், கரோனா உயிரிழப்பை குறைக்க உதவும் ரெம்டேசிவிர் மருந்து, அமெரிக்காவைத் தவிர மற்ற நாடுகளுக்கு, அடுத்த மூன்று மாதங்களுக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மைக் ரியான், "ரெம்டேசிவிரை உற்பத்தி செய்யும் கிலியட் சயின்ஸ் நிறுவனத்துடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் விதிமுறைகளை முழுவதுமாக ஆய்வு செய்யவில்லை. மேலும், அந்நிறுவனம் மற்ற நாடுகளிலும் ரெம்டிசிவர் உற்பத்தியை அனுமதிக்ககலாம்.

உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் உயிர்களை காக்கும் மருத்துகள், அணுகக் கூடிய வகையில் இருப்பதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்யும்" என்றார்.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், "கோவிட்-19 தொற்று என்பது மனித இனத்திற்கு ஏற்பட்டுள்ள ஒரு சோதனை. இந்தச் சூழ்நிலையில் சமூக ஒற்றுமைக்காகவும் மனித நேயத்திற்காகவும் நாம் செயல்பட வேண்டும்.

மேலும், இந்த கரோனா தொற்றிலிருந்து மீண்டுவர ஒருங்கிணைந்த விரிவான திட்டமே சிறந்த ஒரு வழியாக இருக்கும். அப்படிப்பட்ட திட்டங்களைப் பின்பற்றாத நாடுகள் கரோனாவை எதிர்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்ளும்" என்றார்.

இதையும் படிங்க: தங்கள் பாடல்களை பயன்படுத்தக் கூடாது - டிரம்பை மிரட்டும் 'ரோலிங் ஸ்டோன்ஸ்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.