அமெரிக்காவின் மஸ்ஸாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள போஸ்டன் நகரில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் பூங்கா அமைந்துள்ளது. இங்கிருந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் சிலையின் தலை, அடையாளம் தெரியாத நபர்களால் துண்டிக்கப்பட்டு கீழே கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மேயர் மார்டி வால்ஷ் கூறுகையில், "சேதப்படுத்தப்பட்ட சிலையும், தலை பாகமும் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட சிலை மட்டும் போஸ்டனில் மீண்டும் மீண்டும் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்படுகிறது. ஜூன் 2015இல் "பிளாக் லைவ்ஸ் மேட்டர்" ஸ்ப்ரே-பெயின்ட் மூலம் சிவப்பு வண்ணங்கள் சிலையில் தெளிக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டில், சிலையின் தலை காணாமல் சென்று, ஆறு நாட்களுக்குப் பிறகுதான் கிடைத்தது. இனத்திற்கு எதிராகப் போராட்டம் நடைபெறும்போது மட்டுமே குறிவைக்கப்படும் கொலம்பஸ் சிலையானது, தற்போது அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சேதப்படுத்தப்பட்டிருக்கலாம்" எனத் தெரிவித்தார்.
இதே போல், வர்ஜீனியாவின் ரிச்மண்டில் உள்ள கொலம்பஸ் சிலை செவ்வாய்க்கிழமை இரவு கவிழ்ந்து, ஏரியில் வீசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.