வாஷிங்டன்: அமெரிக்காவில் விசா மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய சீன விஞ்ஞானிக்கு, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சீன தூதரகம் அடைக்கலம் கொடுத்திருப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ தெரிவித்திருந்த நிலையில், அவர்கள் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
உயிரியல் ஆராய்ச்சியாளரான டாங் ஜுவான், அமெரிக்காவிற்குள் நுழைவதற்காக சீன ராணுவத்துடன் தனக்குள்ள தொடர்பு குறித்து பொய் கூறியிருப்பதும், பின்னர் கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக, சீன தூதரகத்தில் தஞ்சமடைந்திருப்பதாகவும் வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
ஜூன் 26ஆம் தேதி விசா மோசடி தொடர்பாக நீதிமன்றத்தில் டாங் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவரது விசா விண்ணப்பத்தில் சீன ராணுவத்துடனான தனது தொடர்பை அவர் மறைத்து வைத்திருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆனால் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. அலுவலர்கள், சீன ராணுவ சீருடையுடன் இருக்கும் புகைப்படங்கள், போர் ராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக டாங் பணியாற்றி இருப்பதையும் விசாரணையில் கண்டறிந்தனர்.
ஜூன் 20 அன்று எஃப்.பி.ஐ விசாரணையின்போது, 'சீன ராணுவத்தில் பணியாற்றுவதை மறுத்த டாங், தனது சீருடையில் உள்ள சின்னத்தின் அர்த்தம் தனக்கு தெரியாது என்றும், ராணுவ மருத்துவ பல்கலையில் கலந்துகொள்ள ராணுவ சீருடை அணிவது அவசியம் என்றும் டாங் கூறியதாக ஜூலை 20ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கலான விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனது முயற்சி பலிக்கவில்லை - விகாஸ் துபே மனைவி வேதனை
டாங்கின் வீடு மற்றும் மின்னணு ஊடகங்களைதேடியபோது, அவருக்கும் சீன ராணுவத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததை கண்டறிந்தனர். விசாரணையை தொடர்ந்து, டாங், சான் பிரான்சிஸ்கோ சீன துணைத் தூதரகத்திற்கு தப்பிச் சென்று, பதுங்கியிருப்பதாக எஃப்.பி.ஐ அலுவலர்கள் தெரிவித்திருந்தனர்.
அமெரிக்காவில் உள்ள பல சீன விஞ்ஞானிகளின் பெயர்களை குறிப்பிட்டு வழக்கறிஞர்கள் குற்றவியல் புகார் அளித்துள்ளனர். அதில் சீன ராணுவ திட்டத்தின் ஒரு பகுதியாக எஃப்.எம்.எம்.யூ அல்லது தொடர்புடைய நிறுவனங்கள் - ராணுவ விஞ்ஞானிகளை பொய்யான காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு அனுப்புவதற்காக கூறுகின்றனர். மேலும் சீன விஞ்ஞானிகளின் உண்மையான வேலைவாய்ப்பு பற்றி தவறான அடையாளம் அல்லது அறிக்கைகளுடன் அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இச்சூழலில் இவருடன் சேர்த்து மொத்தம் நான்கு பேரை கைது செய்துள்ள எஃப்.பி.ஐ அலுவலர்கள் வட கலிஃபோர்னியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஜூலை 27ஆம் தேதி அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.