எல் சால்வடோர் நாட்டைச் சேர்ந்த தந்தை, மகள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்டபோது நீரில் மூழ்கிப் பலியாயினர். இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதற்காக அமெரிக்க அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராகச் செயல்பட்டு வரும் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப்பை விமர்சிக்கும் நோக்கிலும் கனடாவைச் சேர்ந்த கார்டூனிஸ்ட் மைக்கேல் தே அடர், கேளிக்கை சித்திரம் ஒன்றை வரைந்து சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
அதில், நீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடக்கும் தந்தை, மகளுக்கு அருகில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நின்றுகொண்டிருப்பது போலவும், அவர்களிடம் " நான் இங்கே கோல்ப் விளையாடலாமா?" என்று ட்ரம்ப் கேட்பது போலவும் அந்த சித்திரம் அமைந்திருந்தது.
இது சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், அவர் பணிபுரிந்துவந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.