ETV Bharat / international

3,500 பயணிகளை ஓக்லாண்ட் துறைமுகத்தில் கரையிறக்க திட்டம்

சான் பிரான்சிஸ்கோ : இளவரசி குரூஸின் கிராண்ட் கப்பலில் பயணம் மேற்கொண்ட 3,500க்கும் மேற்பட்ட மக்களை கிழக்கு சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவில் உள்ள ஓக்லாண்ட் துறைமுகத்தில் கரையிறக்க திட்டமிட்டுள்ளதாக கலிபோர்னியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

California govt plans to land 3,500 passengers in the Oakland
3,500 பயணிகளை ஓக்லாண்ட் துறைமுகத்தில் கரையிறக்க திட்டமிட்டுள்ள கலிபோர்னியா அரசு!
author img

By

Published : Mar 9, 2020, 9:26 PM IST

அமெரிக்காவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் (கோவிட்- 19) பாதிப்பால் மக்கள் பீதியடைந்துள்ள நிலையில் குரூஸின் கப்பலின் பயணிகளை கலிபோர்னியாவில் கரையிறக்க மாகாணத்தின் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்களின் எதிர்ப்புகளை சமாளிக்கும் வகையில் ஊடகங்களை சந்தித்த ஓக்லாண்ட் மேயர் லிபி ஷாஃப் , “ கொரோனா வைரஸ் தொடர்பான முழு பரிசோதனைக்கு கப்பலின் பயணிகள், பணியாளர்கள் உட்படுத்தப்படுவார்கள். அடிப்படையான 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு முன்னர் கப்பலில் இருந்த எவரும் விடுவிக்கப்பட மாட்டார்கள்” என உறுதியளித்தார்.

இந்த சொகுசுக் கப்பலில் பயணித்த பயணிகளில் 21 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 19 நபர்கள் கப்பலின் பணியாளர்கள் என தெரிகிறது.

இதற்காக ஓக்லாண்ட் துறைமுகத்தில் 11 ஏக்கர் பரப்பளவில் தங்குமிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கிராண்ட் இளவரசி கப்பலில் இருக்கும் 54 நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட பயணிகளை அவர்களது சொந்த நாடுகளுக்கு விமானங்கள் மூலமாகவோ பேருந்துகள் மூலமாகவோ அனுப்பவும் அரசு முடிவெடுத்திருப்பதாகவும் அலுவலர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக அமெரிக்க சுகாதாரத் துறையைச் சேர்ந்த டாக்டர் ஜான் ரெட் கூறுகையில்,"நாங்கள் அவர்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் கப்பலில் இருந்து இறக்குவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறோம். எனவே, எதற்கும் அச்சப்படாமல் பயணிகள் அவரவர் தங்கள் அறைகளில் தங்குங்கள்" என கேட்டுக்கொண்டுள்ளார்.

California govt plans to land 3,500 passengers in the Oakland
3,500 பயணிகளை ஓக்லாண்ட் துறைமுகத்தில் கரையிறக்க திட்டமிட்டுள்ள கலிபோர்னியா அரசு!

இதையும் படிங்க :
அமெரிக்காவில் 500 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு
!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.