பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது சில நாள்களுக்கு முன் உறுதி செய்ப்பட்டது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட அவர், தனக்கு வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கியதாகவும் அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தனக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதனால் தன்னைத் தானே அவர் தனிமைப்படுத்திக் கொண்டதாவும் கூறினார். இருப்பினும் வீட்டிலிருந்தபடியே தனது பணியைத் தொடரப்போவதாகவும் பிரிட்டன் பிரதமர் கூறினார். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரிட்டன் அரசு செய்வதாக கூறிய அவர், மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வதாக பதிவிட்டுருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டரம்ப் பிரதமர் போரிஸ் ஜான்சனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். கோவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து விரைவில் மீண்டு வருவீர்கள் என்று ட்ரம்ப் தெரிவித்தாக பிரிட்டன் பிரதமரின் அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், கோவிட்-19 வைரஸ் தொற்றை ஒழிக்க ஜி 7, ஜி 20 நாடுகளுடன் இணைந்து பணியாற்ற அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் அந்த அலுவலர் தெரிவித்தார்.
இந்த வைரஸ் தொற்றால் பிரிட்டனில் இதுவரை 14,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 759 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் உலகத் தலைவராக பிரிட்டன் பிதமர் போரிஸ் ஜான்சன் கருதப்படுகிறார்.
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்டுவந்த 101 வயது முதியவர்!