பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோ மனைவி மிச்செல் போல்சனாரோவுக்கு கடந்த ஜூலை 30ஆம் தேதி கரோனா பாதிப்பு உறுதியானது. ஏற்கனவே, அதிபர் ஜேர் போல்சனாரோவுக்கும் அமைச்சர்கள் பலருக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி சமீபத்தில் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், அதிபர் ஜேர் போல்சனாரோ மனைவியும் நாட்டின் முதல் பெண்மணியுமான மிச்செல் போல்சனாரோ கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டதாக அறிவித்துள்னர்.
இதுகுறித்து மிச்செல் போல்சனாரோ கூறுகையில், " கரோனா பரிசோதனை நெகடிவ் வந்துவிட்டது. உங்களின் பிரார்த்தனைக்கும் அன்பிற்கும் மிக்க நின்றி" எனத் தெரிவித்தார்.
உலகளவில் கரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகளில் பிரேசில் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை 33 லட்சத்து 40 ஆயிரத்து 197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சா பாலோ பகுதியில் மட்டுமே ஏழு லட்சத்தை கரோனா பாதிப்பு நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.