தென் அமெரிக்க நாடான பிரேசிலின் புகழ்பெற்ற ரியோ டி ஜெனிரோ நகரில் 88 அடி உயர பிரமாண்ட ராட்டினம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதிகள் கொண்ட 54 கேபின்களுடன் செயல்படும் இந்த ராட்டினத்தில் ஒரே நேரத்தில் 400 பேர் ஏறி பயணம் செய்யலாம்!
சீனாவில் தயாரிக்கப்பட்டு பின் மூன்று கப்பல்கள் மூலம் இந்த ராட்டினமானது ரியோ டி ஜெனிரோ நகருக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. கடற்கரை அருகே அமைந்துள்ள இந்த பிரமாண்ட ராட்டினத்தைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
"இந்த ராட்டினத்தில் ஏறினால் அருகேயுள்ள நிடிராய் நகர்கூட தெரிகிறது. அசந்து போய்விட்டேன்" என எடுவார்டோ கொல்டி (சுற்றாலாப் பயணி) வியந்து பேசினார்.
தென் அமெரிக்காவிலேயே மிகப் பெரிய ராட்டினம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிங்க: அமெரிக்க அதிபர் மாளிகையில் பிரமாண்ட கிறிஸ்துமஸ் மரம் ஒளியூட்டல்!