வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வரும் ஜுன் 28ஆம் தேதி, இஸ்ரேலின் குடியரசுத் தலைவர் ரியுவன் ரிவ்லின் வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசவுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், "குடியரசுத் தலைவர் ரிவ்லினின் வருகை அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது மட்டுமின்றி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான ஆழமான உறவை எடுத்துக்காட்டுகிறது" எனத் தெரிவித்தார்.
வரும் ஜூலையுடன் ரியுவனின் ஏழு ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதால், அதற்கு முன்பே அவர் அமெரிக்கா பறக்கவுள்ளார்.
கடந்த மாதம் காசாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய அமைப்பினருக்கும் இடையே நிகழ்ந்த சண்டையின் எதிரொலியாக, இஸ்ரேலின் புதிய பிரதமாக நஃப்டாலி பென்னெட் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'இஸ்ரேலில் மீண்டும் தாக்குதல்' - போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்க ஐ.நா. அறிவுரை